கோபிக்கு இப்படி ஒரு நிலைமையா?. பொண்டாட்டியை பொண்ணு பார்க்க வரும் பழனிச்சாமி குடும்பம்

Baakyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பல்வேறு காட்சிகளை அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில் தற்போது பாக்யா கல்லூரிக்கு சென்று படித்து வருகிறார். தனது மாமியார் இதற்கு சம்மதிப்பாரா என்ற தயக்கத்துடன் தான் பாக்யா இருந்தார்.

குடும்பத்தில் எல்லோரை விடவும் ஈஸ்வரி தான் இப்போது பாக்யாவுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். தனது மகனையே சரமாரியான கேள்வியால் சவுக்கடி கொடுக்கிறார். மேலும் இதற்கு முன்னதாக பழனிச்சாமி தனது மனைவி பாக்யாவுடன் பழகி வருவதாக பழனிச்சாமியின் அம்மாவிடம் கோபி பேசி இருந்தார்.

திருமண வயதை கடந்தும் சிங்கிளாகவே சுற்றி வரும் பழனிச்சாமிக்கு பாக்யாவை திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவுக்கு அவரது அம்மா வந்து விட்டார். இதனால் பழனிச்சாமிடம் பாக்யாவை பொண்ணு கேட்டு போகலாம் என்று கூறுகிறார். இதைக் கேட்ட பழனிச்சாமி அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் நாங்கள் இப்போது நட்பாக தான் பழகி வருகிறோம். கடைசிவரை நாங்கள் இது போல இருக்க ஆசைப்படுகிறோம் என்று தனது அம்மாவிடம் கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல் தயவுசெய்து இந்த விஷயத்தை பாக்யாவிடம் சொல்லி விடாதீர்கள் என்றும் கேட்டுக்கொள்கிறார். ஆனால் பழனிச்சாமியின் அம்மாவுக்கு இது உறுத்தலாகவே இருக்கிறது.

பாக்யாவை திருமணம் செய்து வைத்தால் தனது மகன் பழனிச்சாமியின் கடைசி காலம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறார். இதனால் பழனிச்சாமிக்கு தெரியாமலேயே பாக்யாவை பொண்ணு கேட்டு அவர் வீட்டுக்கு செல்ல அவரது அம்மா முடிவெடுக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த விஷயம் கோபிக்கு தெரிந்தால் நெஞ்சு வலியை வந்துவிடும். இப்போதே பழனிச்சாமி மற்றும் பாக்யாவை பிரிக்க கோபி படாதபாடு பட்டு வருகிறார். இவர்களுக்கு திருமணம் என்று செய்தி வந்தால் அவ்வளவுதான். ஆனால் பாக்யா தன்னுடைய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். ஆகையால் கண்டிப்பாக பழனிச்சாமியை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை.