90களில் இருந்து இப்போது வரை அஜித், விஜய் இருவரும் திரையில் சரிக்கு சரி மோதிக் கொள்கின்றனர். ஆனால் விஜய் மாதிரி யாரு வேண்டுமானாலும் நடித்து விடலாம், ஆனால் அஜித்தின் இந்த கேரக்டரில் நடிக்கவே முடியாது அந்த அளவிற்கு சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார்.
ஒவ்வொரு படங்களையும் நிதானமாக நடித்துக் கொண்டிருக்கும் அஜித், துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தை துவங்க இருக்கிறார் ஆனால் விஜய் வாரிசு படத்தை முடித்துவிட்டு லோகேஷ் இயக்கிய லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து வரும் ஆயுத பூஜைக்கு படத்தை ரிலீஸ் செய்ய ரெடியாக இருக்கிறார்.
ஒருவர் விஜய் படங்களை எளிதாக ரீமிக்ஸ் செய்து ஹிட் கொடுக்கலாம், ஏனென்றால் விஜய்யின் ஒவ்வொரு படத்தின் வெற்றியும் அந்த படங்களின் திரைக்கதை மற்றும் இயக்குனர்களை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் விஜய் தவிர வேறு ஏதாவது ஒரு ஹீரோ அந்தப் படத்தில் நடித்திருந்தாலும் அதே அளவுக்கு வெற்றியை கொடுத்து இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஏஆர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தை சொல்லலாம். அஜித் ஹிட் படங்களை அவ்ளோ பிஸியாக ரீமேக் செய்ய முடியாது. அஜித் கொடுத்த அதே ரிசல்ட்டை மற்ற எந்த நடிகர்களும் அவருடைய படங்களில் நடித்து கொடுக்க முடியாது என்பதை அடித்து சொல்லலாம்.
உதாரணத்திற்கு மங்காத்தா படத்தில் அஜித் நடித்த விநாயக் மகாதேவ் கேரக்டரில் அவரை தவிர வேறு யாராலும் அவ்வளவு கச்சிதமாக நடிக்க முடியாது. அதே போல் தான் வேதாளம் படமும். ரஜினியின் ஜெயிலர் படம் வெளியான அடுத்த நாள் சிரஞ்சீவியின் போலா சங்கர் படம் வெளியானது. இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
போலா சங்கர் திரைப்படம் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அஜித் ஒவ்வொரு படத்திலும் காட்டும் தனித்துவமான நடிப்பை வேறு எந்த நடிகர்களாலும் அவ்வளவு எளிதாக காட்டி விட முடியாது. அதனால் தான் அஜித் வேற ரகம் என தல ரசிகர்கள் கெத்து காட்டுகின்றனர்.