திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இவர்தான் அடுத்து ரஜினியின் இடத்தை பிடிக்கப் போகிறார்.. கே பாலச்சந்தர் கைகாட்டிய அந்த நடிகர் யார் தெரியுமா.?

Super Star Rajinikanth: தமிழ் சினிமாவில் சமீப காலமாக யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மிகப்பெரிய பிரச்சனை ஒன்று போய்க்கொண்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை இந்த விஷயத்தை பூதாகரமாக மாற்றி இருக்கிறார்கள். உண்மையிலேயே ஏன் இந்த பட்டத்திற்கு குறி வைத்து இப்படி ஒரு பிரச்சனை நடக்கிறது என பலரும் குழம்பி வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு தளபதி விஜயின் ஆஸ்தான இயக்குனர் ஒருவர் தெளிவான பதிலை சொல்லி இருக்கிறார்.

நடிகர் விஜய்க்கு திருப்பாச்சி என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர்தான் இயக்குனர் பேரரசு. இவர் சமீபத்தில் இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு மற்ற பிரபலங்களைப் போல் மழுப்பாமல் தெளிவான பதில் ஒன்றை சொல்லி இருக்கிறார். மேலும் தளபதி விஜய் நிறைய படங்களில் தன்னை ஒரு ரஜினி ரசிகர் என்று தான் அடையாளப்படுத்தி இருக்கிறார் என்ற உண்மையையும் போட்டு உடைத்து இருக்கிறார்.

Also Read:வெளிநாடுகளில் விஜய் இல்லாமல் வசூல் சாதனை படைத்த 7 தமிழ் படங்கள்.. போர் தொழில் மொத்த வசூலை மிஞ்சிய ரஜினி

பேரரசு இயக்கிய திருப்பாச்சி படத்தில் முதல் பாடலில் விஜய் வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்து விபூதி பூசிக்கொண்டு ஆடுவது போல் இருக்கும். இது ரஜினியின் அண்ணாமலை படத்தில் வரும் வந்தேன்டா பால்காரன் பாடலின் இன்ஸ்பிரேஷன் தான் எனவும், அதை விஜய்யிடம் சொல்லும் பொழுது அவரே அப்படி நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார் என்றும் சொல்லி இருக்கிறார்.

மேலும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை கொளுத்தி போட்டது விஜய் இல்லை, அப்படி இருக்கும் பொழுது அவர் ஏன் அந்த தீயை அணைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது போன்ற பல விஷயங்களை தாண்டி வந்திருக்கிறார். அவர் பட்ட கஷ்டங்களும், வெற்றிகளும் ரொம்பவே அதிகம். அவருக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என சொல்லி இருக்கிறார்.

Also Read:வசூலில் மிரள செய்யும் ஜெயிலர் படம்.. பொறுக்க முடியாமல் கமல், மணிரத்னம் என பஞ்சாயத்தை கூட்டும் ப்ளூ சட்டை

மேலும் தமிழ் சினிமாவில் யார் அடுத்த ரஜினி என்ற கேள்வியை கேட்கலாமே தவிர, யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என கேட்பதெல்லாம் ரொம்பவும் தவறு. சூப்பர் ஸ்டார் என்பது ரஜினி மட்டும் தான். மேலும் தமிழ் சினிமாவில் இவர்தான் அடுத்து ரஜினியின் இடத்தை பிடிக்கப் போகிறார் என்று அவருடைய குருவான இயக்குனர் கே பாலச்சந்தர் பல வருடங்களுக்கு முன்பே ஒரு நடிகரை கைகாட்டி இருக்கிறார் என சொல்லி இருக்கிறார்.

ஒரு விழா மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்பே இயக்குனர் பாலச்சந்தர், அடுத்து ரஜினியின் இடத்தை பிடிக்கப் போகிறவர் விஜய் தான் என சொல்லி இருக்கிறார். காதலுக்கு மரியாதை படத்தை பார்த்துவிட்டு பாலச்சந்தர் இவ்வாறு சொல்லியதாக இயக்குனர் பேரரசு தற்போது இதைப்பற்றி பேசி இருக்கிறார்.

Also Read: ரஜினி கொடுத்த பூஸ்ட் 2ம் பாகத்திற்கு தயாரான நெல்சன்.. இத்தனை படங்களா? என்னடா இது வெறித்தனமா இருக்கே!

Trending News