தொடர் வசூல் வேட்டை ஆடி வரும் ஜெயிலர்.. 6 நாள் கலெக்ஷனில் ஓரம் கட்டப்பட்ட மூன்று பிரம்மாண்ட படங்கள்

Jailer Movie: சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி மக்களால் கொண்டாடப்பட்டு வரும் படம் தான் ஜெயிலர். பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய இப்படம் வசூலில் பட்டைய கிளப்பி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் 6ம் நாள் கலெக்ஷனால் ஓரம் கட்டப்பட்ட படங்களைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

பேட்டை, தர்பார் ,அண்ணாத்த போன்ற படங்களில் கிடைத்த வெற்றியை விட தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படம் மாஸ் காட்டி வருகிறது. இதற்கு உதாரணமாக 5 நாள் கலெக்ஷனே சுமார் 300 கோடியை பார்த்துள்ள நிலையில், நேற்று விடுமுறை நாள் என்பதால் திரையரங்கில் 80 சதவீதம் பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தனர்.

Also Read: 61 வயதில் பிரம்மாண்ட கோவில், பங்களா, 42 வருட அனுபவம்.. ஆக்சன் கிங்கின் மொத்த சொத்து மதிப்பு

முந்தைய தினம் வரை இப்படத்திற்கான வசூல் 300 கோடி எனின் விடுமுறையை கொண்டு தற்போது கலெக்ஷனில் 400கோடியை நெருங்கி உள்ளது. இத்தகைய கலெக்ஷன் பல பிரமாண்ட படைப்புகளை முறியடித்து சாதனை படைத்து வருகிறது.

தற்போது இப்படத்தின் 6 நாள் கலெக்ஷன் முறியடித்த 3 படங்களை பற்றி பார்ப்போம். அக்கடதேச படங்களான புஷ்பா மற்றும் ஆதிபுருஷ் மக்களிடையே எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஷ்பா நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் சுமார் 350 கொடியை பெற்றது.

Also Read: 3 தேசிய விருதுகளை வென்ற சரித்திர படம்.. இன்று மாலை நேரடியாக யூடியூப் சேனலில் வெளியிடும் கமல்

அதைத்தொடர்ந்து பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய ஆதிபுருஷ் படம் மக்களிடையே எதிர்மறை விமர்சனங்களை பெற்று போட்ட பட்ஜெட்டில் பாதி மடங்கையே வசூலாய் பெற்றது. இதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் 350 கோடி. அதைத்தொடர்ந்து வரலாற்று காவியமான பொன்னின் செல்வன் 2 பிரம்மாண்டத்தின் படைப்பாய் பார்க்கப்பட்டது.

இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் 380 கோடி ஆகும். அவ்வாறு இப்படங்களின் மொத்த கலெக்ஷனையும் ஆறே நாளில் தூக்கி சாப்பிட்டு விட்டது ஜெயிலர் என்றே கூறலாம். மேலும் பல எதிர்பார்ப்புகளை உண்டுப்படுத்திய அக்கட தேச படங்களை தன் நடிப்பால் ஓரம் கட்டினார் சூப்பர் ஸ்டார் என்றால் அது மிகையாகாது.

Also Read: விடாமுயற்சி அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.. வேற லெவலில் இருக்கும் நியூ லுக்