விரக்தியில் 3 ஹோட்டல்களையும் மூடிய கருணாஸ்.. அதிர்ச்சிகரமான காரணத்தை சொல்லிய லொடுக்கு பாண்டி

Actress Karunas: தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திரம் கதாபாத்திரம், ஹீரோ என பன்முகம் காட்டியவர் நடிகர் கருணாஸ். அதிலும் சூர்யாவுடன் நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக நடித்த கருணாஸ் இப்போதும் ரசிகர்களால் அவ்வாறே அழைக்கப்படுகிறார். அவருக்கு இன்னொரு பக்கமாக அரசியல் இருந்தது.

அரசியலிலும் ஒரு கை பார்த்து விட்டார். இப்பொழுது அவர் எந்த பதிவியிலும் இல்லை. தற்சமயம் ஒரு சில படங்கள் தான் நடித்து வருகிறார். இந்நிலையில்  அவர் ஆரம்பித்த மூன்று ஹோட்டல்களையும் மூடிவிட்டாராம்.  அதற்கான அதிர்ச்சிகரமான காரணத்தை தற்போது பேட்டி ஒன்றில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

Also Read: கருணாஸ் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய 6 படங்கள்.. தன்னை அடையாளப்படுத்த போராடிய பச்சமுத்து

சின்ன வயதில் அவங்க அப்பா டீ கடை வைத்திருந்தார். ஹோட்டல் மீது இவருக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. இவர் சென்னை நூறடி ரோட்டில் முதல் முதலாக ‘லொடுக்கு பாண்டி மெஸ்’ என்ற ஹோட்டலை ஆரம்பித்தார். ஆனால் அந்த இடம் வாடகைக்கு விட்டவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டதால் அங்கு அவரால் தொடர்ந்து ஹோட்டலை நடத்த முடியவில்லை.

பின்பு இரண்டாவது ஹோட்டலை பெரும் புதூரில் ஆரம்பித்திருக்கிறார் தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் கருணாஸ், தான் நடித்த திண்டுக்கல் சாரதி படத்தின் பெயரையே ஹோட்டலுக்கும் வைத்தார். ஹோட்டலில் வியாபாரம் நன்றாகவே நடந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஹோட்டல் கையை வெட்டு போனதாகவும் கருணா வருத்தத்துடன் தெரிவித்தார்.

Also Read: வெயிட்டான கதாபாத்திரத்தை மறுத்து அழும் 5 ஹீரோக்கள்.. பிரசாந்த் ரோலில் ஸ்கோர் செய்த மாதவன்

அதன் பிறகு ‘கருணாஸ் ரத்ன விலாஸ்’ என்ற பெயர் வைத்து ஒரு ஹோட்டலை ஆரம்பித்திருக்கிறார். அந்த ஹோட்டலும் கொரோனா காலகட்டத்தில் வியாபாரம் டல் அடித்ததால் மூடிவிட்டார். இவ்வாறு தொடர்ந்து மூன்று ஹோட்டலும் அடுத்தடுத்து மூடப்பட்டதால், இப்போது மலேசியாவில் ஒரு ஹோட்டல் துவங்க வேண்டும் என்று இடத்தை எல்லாம் பார்த்து விட்டு வந்து விட்டாராம்.

இந்த தொழிலில் பொறுமை மிகவும் முக்கியம், இந்த முறை அவருடைய மனைவியின் பொறுப்பில் தான் மலேசியாவில் ஹோட்டலை துவங்க  இருக்கிறார். காரணம்  ஹோட்டல்  பிசினஸ் சரியாக அவருக்கு கை கொடுக்க வில்லையாம். இவருடைய இந்த பேட்டியில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also Read: காமெடி பண்றேன்னு கடுப்பேத்திய 6 நடிகர்கள்.. விஜய்யுடன் படம் முழுக்க டிராவல் செஞ்சும் பிரயோஜனம் இல்லாத சதீஷ்