Padayappa Rajini: சூப்பர் ஸ்டார் என்று உலகம் முழுக்க சொன்னால் ரஜினியின் பெயர் தான் எல்லோரும் முதலில் சொல்லுவதாக இருக்கும். அதுவும் இப்போது அவருடைய ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் ரஜினி படங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு குறுகிய நாட்களிலேயே வசூலை குவித்து வருகிறது.
இவ்வாறு செல்வாக்கு மிகுந்த நடிகரான ரஜினியை படையப்பா படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மோசமாக பேசி உள்ளது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
Also Read : மொத்தத்தையும் கெடுத்து குழப்பிய அனிருத்.. ரஜினியிடம் வசமாய் சிக்கி விழி பிதுங்கிய நெல்சன்
இதில் மிகக் குறைந்த காட்சியில் நடித்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். பொதுவாக வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வரும் இவர் விஜய்யின் லியோ படத்தில் தற்போது நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கூறுகையில் தலைவரை ஆரம்பத்தில் நாங்கள் நம்பினோம். ஆனால் மக்களுக்காக அவர் ஒன்றுமே செய்யவில்லை என்று பகிர் கிளப்பி இருக்கிறார்.
அதாவது ரஜினி படையப்பா படத்தில் நடித்து கொண்டிருந்தபோது இவர் நம்மவர், தமிழ்நாட்டு மக்களுக்காக கண்டிப்பாக ஏதாவது செய்வார் என்று நாங்கள் நம்பி இருந்த நிலையில் இன்றுவரை தமிழகத்திற்காக ஒன்று கூட செய்யவில்லை. மேலும் நம்மை விட்டு பிரிந்த புனித் ராஜ்குமார் அவரது மக்களுக்காக நிறைய செய்து இருக்கிறார்.
Also Read : கமல், விஜய் தான் எங்களை காப்பாத்தினாங்க.. ரஜினி என்னத்த கிழிச்சாரு? எப்போதுமே உலக நாயகன் பெஸ்ட்!
அவர் படங்களில் சம்பாதித்த பணத்தை நிறைய பள்ளிகளுக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார். இலட்சக்கணக்கான குழந்தைகளின் படிப்புக்காக உதவி செய்து இருக்கிறார். அந்த வகையில் புனித் ராஜ்குமார் உடன் ரஜினியை ஒப்பிட்டால் ஒன்றுமே செய்யவில்லை என்று மன்சூர் அலிகான் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
மேலும் ஒரு புறம் ஹீரோவாகவும், மற்றொருபுறம் ஆன்மீகத்திலும் இருக்கிறார். படத்தில் மட்டும் ஹீரோவாக நடித்து என்ன பிரயோஜனம், நிஜத்தில் ஒன்றுமே ரஜினி செய்யவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கடைசியாக பெரிய மனுசன நம்பி மோசம் போனது தான் மிச்சம் என்று மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.
Also Read : சிவகார்த்திகேயனிடம் நண்பராக ஒட்டிக்கொண்ட 5 இயக்குனர்கள்.. ரஜினிக்கு செட்டே ஆகாத கேரக்டர்