Baakhiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக நிறைய காட்சிகளை இயக்குனர் எடுத்து வருகிறார். அந்த வகையில் இப்போது பாக்யா கல்லூரிக்கு சென்று படித்து வருகிறார்.
ஒருபுறம் சமையல் ஆர்டர் மற்றொருபுறம் கேட்டரிங் என தன்னை பிஸியாக வைத்துக் கொள்கிறார். கணவன் தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தவுடன் தூக்கி எறிந்துவிட்டு பாக்கியா சொந்த காலில் நிற்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். இப்போது அவருக்கு உறுதுணையாக பழனிச்சாமியும் இருக்கிறார்.
Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸில் விழாக்கு பஞ்சமில்லை.. கதைக்கு தான் பஞ்சம்
இந்த சூழலில் திடீரென கேட்டரிங்கில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அங்கு சென்று பார்த்தால் சாப்பாடு சரியில்லை, உப்பு இல்லை என்பது போன்ற பிரச்சனைகள் எழுகிறது. இதனால் கோபமடைந்த பாக்கியா பொங்கி எழுந்து தன்னுடன் வேலை பார்க்கும் பெண்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
அதாவது தன்னுடைய அஸ்திவாரமே இந்த கேட்டரிங் பிசினஸ் தான். இதுல மட்டும் நம்ம தோற்றுப் போய் விட்டோம் என்றால் நம்மள மாதிரி முன்னுக்கு வரணும் என்று நினைக்கிறவங்கள மட்டம் தட்டிடுவாங்க. இவங்களுக்கு ஒண்ணுமே வராது என்று சொல்லுவாங்க. அதுக்கு நாமலே இடம் கொடுத்து விட கூடாது.
Also Read : புகழை கைது செய்ய வந்த போலீஸ்.. விஜய் டிவி அரங்கத்தில் நடந்த சர்ச்சை சம்பவம்
நம்மள தப்புன்னு சொல்றவங்க முன்னாடி உயர்ந்த நிக்கணும். ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று பாக்கியா அதிரடியாக பேசி முடிக்கிறார். இதைப் பார்த்து பழனிச்சாமி வாயடைத்து போகிறார். பாக்கியா தான் மட்டும் முன்னேறாமல் தன்னை சுற்றி இருக்கும் பெண்களையும் ஊக்குவித்து வருகிறார்.
நாளுக்கு நாள் பாக்கியலட்சுமி தொடர் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஊக்கம் தரும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இவரின் வளர்ச்சியை பார்த்து கோபி வயிற்றெரிச்சல் பட இருக்கிறார். மேலும் இன்னும் சுவாரசியமான காட்சிகளுடன் வரும் வாரங்களில் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
Also Read : முறிந்து போன விஜய் டிவியின் காதல் ஜோடி.. ஓவரா போட்ட ஆட்டத்தால் செஞ்சி விட்ட காதலன்