வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

இரட்டை வேடத்தில் நடித்த 6 ஹீரோயின்கள்.. தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த நயன், சமந்தா

6 Heroines: படத்தில் இரட்டை வேடத்தில் அசத்திய நடிகர்கள் ஏராளம். அவ்வாறு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு தன் சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டி, இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பிய ஆறு ஹீரோயின்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

ஊர்வசி: 1995ல் காமெடி கலந்த பேய் படமாய் வெளிவந்த மாயா பஜாரில்,  ராம்கி, ஊர்வசி, விசு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் தன்னை கொலை செய்தவர்களை பழிவாங்கும் படலத்தில் சுஜி, மாயம்மா என்ற இரு வேடத்தில் தத்துரூபமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார் ஊர்வசி.

Also Read: டாப் ஹீரோவின் மார்க்கெட்டை சல்லி சல்லியாக நொறுக்கிய ஜெயிலர்.. நூறிலிருந்து 650 தியேட்டர்களை உயர்த்திய சம்பவம்

ஜோதிகா: சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெற்றி கண்ட படம் தான் பேரழகன். இப்படத்தில் ஜோதிகா, மனோரமா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கூன் விழுந்த கதாபாத்திரத்தில் இடம் பெற்ற சூர்யாவின் காதலை உணரும் விதமாய் செண்பகம் கதாபாத்திரத்தில் தன் எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார் ஜோதிகா. இப்படத்தில் இரு கதாபாத்திரத்திலும் ஸ்கோர் செய்தார் ஜோ என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய்: 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தில் புஷ்பவல்லி, கல்பனா என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராய். இப்படத்தில் இவரின் நடிப்பு கூடுதல் வெற்றியை பெற்று தந்திருக்கும். மேலும் மணிரத்னத்தின் நுணுக்கங்களை கொண்டு இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Also Read: 90களில் ஹேண்ட்ஸமாய் இருந்து் வில்லன் அவதாரம் எடுத்த 5 ஹீரோக்கள்.. பிரகாஷ்ராஜை வாட்டி வதைத்த மச்சினிச்சி மோகம்

நயன்தாரா: 2019ல் திகில் ஊட்டும் ஹாரர் மூவியாய் வெளிவந்த அயிரா படத்தில்  பவானி, யமுனா என்ற இரட்டை கதாபாத்திரத்தில் தன் தத்ரூபமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார் நயன்தாரா. இருப்பினும் எதிர்பார்த்த அளவு விமர்சனங்களை பெறாது, தயாரிப்பாளர் தரப்பில் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

சமந்தா: 2015ல் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த பத்து எண்றதுக்குள்ள படத்தில் விக்ரம், சமந்தா, பசுபதி, ரகு கேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஷகிலா, காஜி மோய் போன்ற இரு கதாபாத்திரத்தில் சமந்தா தன் நடிப்பினை வெளிக்காட்டினாலும் இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று, எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரஜினி ஜெயிலர் படத்தால் பழையபடி வரும் ஹீரோ வாய்ப்பு.. ஜெட் வேகத்தில் சும்மா ஸ்விங்ன்னு ஏரிய சம்பளம்

சினேகா: 2003ல் வெளிவந்த பார்த்திபன் கனவு என்னும் படத்தில் ஸ்ரீகாந்த், சினேகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பார்த்திபன் கதாபாத்திரத்தில் இடம்பெறும் ஸ்ரீகாந்தின் மனைவியாகவும், காதலியாகவும் இரட்டை வேடத்தில் ஸ்கோர் செய்திருப்பார் சினேகா. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

Trending News