ஜவானால் மீண்டும் அசிங்கப்பட போகும் அட்லி.. விஜயகாந்த் படத்தை காப்பி அடித்ததால் வந்த விளைவு

Jawan-Atlee: அட்லி இப்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி முடித்துள்ளார். கோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டாரை இயக்கியிருப்பது. படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் நயன்தாரா, விஜய் சேதுபதி, அனிருத்தின் இசை என படத்தில் வியக்க வைக்கும் பல சிறப்பம்சங்களும் இருக்கிறது. அதனாலேயே வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ள படத்தை பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அட்லி வழக்கம் போல் வேலையை காட்டியதால் இப்படத்திற்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது ஜவான் படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் காப்பி என தயாரிப்பாளர் ஏற்கனவே அட்லி மீது புகார் ஒன்றை தெரிவித்து இருந்தார்.

ஆனால் அதற்கு அவர் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வராத நிலையில் தற்போது தயாரிப்பாளர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். வழக்கமாக தான் எடுக்கும் படங்களில் பழைய பட சாயலை கொண்டு வருவது தான் அட்லியின் ஸ்டைல். அதனாலேயே அவரை காப்பிய இயக்குனர் என்று ரசிகர்கள் கலாய்த்து தள்ளுவார்கள்.

அந்த வகையில் தற்போது விஜயகாந்த் பட தயாரிப்பாளர் நஷ்ட ஈடு கேட்டு பிரச்சினை செய்து வருகிறார். ஆனால் அட்லி, ஷாருக்கான் போன்ற பெரிய ஹீரோவை வைத்து படம் பண்ணும் திமிரில் கொஞ்சம் ஓவராக பேசி வருகிறாராம். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் தற்போது அதிரடியாக ஒரு விஷயத்தில் இறங்கி இருக்கிறார்.

என்னவென்றால் பேரரசு படத்தை வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிட அவர் முயற்சித்து வருகிறாராம். செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் வெளிவரும் நிலையில் பேரரசு படத்தை வெளியிட்டு அட்லியின் முகத்திரையை கிழிக்கவும் அவர் ஆயத்தமாகியுள்ளார். இது மக்களுக்கு புரியும் பட்சத்தில் அட்லி மோசமாக அசிங்கப்பட போகிறார் என்பது மட்டும் உறுதி.