புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜய்க்கு ஜால்ரா தட்டிய சரத்குமார்.. மேடையிலேயே நோஸ்கட் கொடுத்த சத்யராஜ்

Actor Sathyaraj: தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கிக் கொண்டிருக்கும் சத்யராஜ் தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். எப்போதுமே மனதில் பட்டதை பளிச்சென்று வெளிப்படையாக பேசும் இவர் சமீப காலமாக பரபரப்பை கிளப்பியிருக்கும் ஒரு விஷயம் குறித்த தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.

அதாவது வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கொளுத்தி போட்டிருந்தார். இதனால் கொதித்துப் போன ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாவையே ரணகளம் செய்தனர். விஸ்வரூபம் எடுத்த இந்த பிரச்சனை இப்போது வரை முடியாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Also read: சினிமா இண்டஸ்ட்ரிலாம் எங்களுக்கு தேவையே இல்லை.. விஜய், அஜித் செய்யும் கீழ்த்தரமான வேலைகள் 

அந்த வகையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட சத்யராஜிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடக்கும் பிரச்சனையில் உங்களுடைய கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சத்யராஜ் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் மட்டும்தான். அது ரஜினி சார் தான் என்று வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.

அதற்கு அவர் சரியான ஒரு விளக்கத்தையும் கொடுத்திருக்கிறார். அதாவது சூப்பர் ஸ்டார் என்பது சம்பளத்திலும், வியாபாரத்திலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவரை தான் குறிக்கும். அந்த வகையில் தியாகராஜ பாகவதர் தான் சூப்பர் ஸ்டாராக இருந்தார். ஆனால் அவரை நாம் ஏழிசை மன்னர் என்று தான் குறிப்பிட்டோம்.

Also read: சிங்கமோ, திமிங்கலமோ வேட்டைக்காரன பார்த்து தான் மிருகங்கள் பயப்படனும்.. சைக்கோ வேட்டையில் சரத்குமாரின் ஹிட்லிஸ்ட் டீசர்

அதற்கு அடுத்து எம்ஜிஆர் சூப்பர் ஸ்டாராக இருந்தார். அவரை மக்கள் திலகம் என்று தான் அழைத்தோம். ஆனால் ரஜினியை மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறோம். அவரை மக்கள் திலகம் என்று சொன்னால் நன்றாக இருக்காது. அதே போல் உலக நாயகன் என்றால் அது கமல்ஹாசன் தான். அவரை நடிகர் திலகம் என்று சொன்னால் நன்றாக இருக்காது.

அப்படி பார்த்தால் தளபதி விஜய், தல அஜித் என்று தான் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு எப்படி போட்டி போட முடியும் என்று அவர் கூறியிருக்கிறார். இதன் மூலம் சரத்குமாருக்கு அவர் நெத்தியடி பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Also read: மெர்சலில் பற்ற வைத்த நெருப்பு.. ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளர்களின் கல்லாவை நிரப்பிய தளபதியின் 6 படங்கள்

Trending News