Actor Thalaivasal Vijay daughtaer Marriage: நடிகர் தலைவாசல் விஜய் குணச்சித்திர நடிகராகவும், பல படங்களில் வில்லன் ஆகவும் சினிமாவில் பரீட்சியமானவராக வலம் வந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கிட்டத்தட்ட 260 படங்களில், 30 வருட காலமாக சினிமாவில் பயணித்து வந்திருக்கிறார். இவர் காதல் கோட்டை படத்தில் அஜித்தின் நண்பராக நடித்து இருக்கிறார்.
மேலும் இவருடைய மகள் ஜெய்வீனா நீச்சல் விளையாட்டு வீராங்கனை. சில வருடங்களாகவே தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான அபராஜித் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இந்த காதல் கைகூடும் விதமாக இவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் மிகவும் எளிமையான முறையில் வீட்டார்களின் முன்னணியில் நடைபெற்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இவர்களுடைய திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரரின் நண்பர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கூடிய விரைவில் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நண்பர்களுக்கு அழைப்பு கொடுத்து அவர்களுக்காக ரிசப்ஷன் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் அபராஜித் என்பவர் இவருடைய 17 வயதில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர். இவருடைய தந்தை டாக்டர் பாபா தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் கிரிக்கெட் வீரர் அபராஜித் 2012 ஆம் ஆண்டு நடந்த ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இறுதி அணியின் வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்.
அத்துடன் 2013ஆம் ஆண்டு நடந்த துலிப் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தியவர். இப்படி இவர்கள் இருவருமே விளையாட்டுத் துறையை சேர்ந்த தம்பதிகளாக இணைந்து விட்டார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளத்தின் மூலம் அவர்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் இவர்களுடைய திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.