வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஏழைகளின் பக்கம் சாயாத பாபா, ரஜினிக்கு இருக்கும் இன்னொரு முகம்.. லியோ வில்லன் அளித்த அதிர்ச்சி பேட்டி

Leo Villain: 72 வயதாகும் ரஜினி தன்னை விட 21 வயது குறைந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை பெரிதும் சர்ச்சையாக்கிவிட்டனர். ஆனால் அதற்கு ரஜினி, ‘ஆன்மீகவாதிகள் தன்னை விட வயதில் குறைவாக இருந்தாலும் அவர்களது காலில் விழுவது என்னுடைய வழக்கம்’ என கூலாக பதில் சொல்லி எண்டு கார்டு போட்டு விட்டார்.

இப்படிப்பட்ட சூழலில் லியோ படத்தில் முரட்டு வில்லனாக நடித்திருக்கும் நடிகர் மன்சூர் அலிகான் ரஜினியை பற்றி பகீர் தகவல்களை பகிர்ந்திருக்கிறார். ‘நடிகராக கஷ்டப்பட்டு ரஜினி முன்னேறினாலும், சமீப காலமாக பின்னால் இருந்து அவரை சிலர் இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர் சினிமாவில் சம்பாதித்தது எல்லாம் கர்நாடகாவில் தான் சேர்த்தார்.

Also Read: ஜெயிலர் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வாரி இறைத்த 130 கொடி சம்பள லிஸ்ட்.. வர்மனை விட மூன்று மடங்கு அதிகமாக வாங்கிய யோகி பாபு

தமிழகத்தில் பத்தாயிரம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு ஏதாவது ஒன்றை செய்து இருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை, அதைத்தவிர அவர் பின்னாடி ஆன்மீகம் என்ற பெயரில் வந்த இளைஞர்களை அகோரிகளாய் மாற்றி விட்டார். இதைப் பற்றி அந்த இளைஞர்களின் பெற்றோர் சூட்டிங் ஸ்பாட்டிலும் வந்து விசாரித்ததுண்டு.

இவர் எதையும் தானாக செய்யவில்லை, இவரை ஒரு கூட்டமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்படி இல்லை என்றால் சமூக விரோதிகள் என போராடும் மக்களை அவ்வளவு ஈசியாக ரஜினி சொல்லி இருக்க மாட்டார். அவர் எப்போதுமே பணக்காரர்களுக்கு மட்டுமே துணை நிற்பார். ஏழைகள் பக்கம் நிற்க மாட்டார்.

Also Read: ஜெயிலர் பட வர்மனுக்கு சோறு போட்ட தொழில்.. திறமையை கண்டுபிடித்து வாய்ப்பு வழங்கிய வாரிசு நடிகர்

அப்படி தான் ஒவ்வொரு முறையும் அவரது கருத்து முரண்படுகிறது. காலா படத்தில் மக்கள் தான் புரட்சி செய்ய வேண்டும் என்று கூறுகிறார். சிங்கிளாய் வந்தால் சிங்கம் என்கிறார், ஆனால் பாட்ஷா படத்தில் இருபது முப்பது பேருடன் கூட்டமாக வருகிறார். கூட்டமாக வருகிறவர்கள் எல்லாம் பன்றி கூட்டம் என்கிறார், அப்படி என்றால் ரசிகர்கள் திரையரங்கில் அவருடைய படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.,அவர்களெல்லாம் பன்றி கூட்டமா!.

ரஜினி அரசியலில் ஒரு சுண்டைக்காய் என்பதை 27 வருடத்திற்கு முன்பே சொல்லிவிட்டேன்’ என்று சமீபத்திய பேட்டியில் மன்சூர் அலிகான் சூடு பறக்க பேசி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இதைக் கேட்டு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Also Read: லியோ ரிலீஸுக்கு வந்த பெரும் சிக்கல், லோகேஷ் தலையில் விழுந்த இடி.. ஜெயிலர் வசூலை உடைக்க தளபதிக்கு வாய்ப்பு இல்லையாம்

Trending News