வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

வில்லன் ஆனந்த்ராஜ் காமெடியில் அசத்திய 5 படங்கள்.. மரகத நாணயத்தை சுத்தலில் விட்ட ட்விங்கிள் ராமநாதன்

Actor Anandraj: மிரள வைக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ஆனந்த்ராஜ். அவ்வாறு 80ஸ் காலகட்டத்தில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக களம் இறங்கியவர். அப்படிப்பட்ட வில்லன், காமெடியில் கலக்கிய 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

முண்டாசுப்பட்டி: வில்லனாய் கலக்கிய இவர் 2014ல் வெளிவந்த முண்டாசுப்பட்டி படத்தில் காமெடியனாய் நடிக்க தொடங்கினார். இப்படத்தில் விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஜமீன்தார் ஏகாம்பரமாய் ஆனந்த்ராஜ் மேற்கொண்ட காமெடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் அடுத்த படம்.. ரஜினியின் நண்பர் நினைவாக எடுத்த முடிவு

ஜாக்பாட்: 2019ல் கல்யாண் இயக்கத்தில் வெளிவந்த ஃபேன்டஸி காமெடி படம் தான் ஜாக்பாட். இப்படத்தில் ரேவதி, ஜோதிகா, சமுத்திரகனி, யோகி பாபு, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். புதையலை தேடி, ரேவதி ஜோதிகாவால் படாத பாடுபடும் மானஸ்தன் கதாபாத்திரத்தில் இவரின் காமெடி பெரிதாக பார்க்கப்பட்டது.

மரகத நாணயம்: 2017ல் ஃபேன்டஸி படமாய் வெளிவந்த இப்படத்தில் ஆதி, முனிஷ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். மரகத நாணயத்தை தேடி அலையும் கும்பலின் தலைவனாய் ட்விங்கிள் இராமநாதன் என்னும் கதாபாத்திரத்தில் ஆனந்த்ராஜ் மேற்கொள்ளும் காமெடி படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும். கடைசியில் மரகத நாணயத்தையே சுத்தலில் விட்டு இருப்பார் ஆனந்தராஜ்.

Also Read: பேருக்கு தான் தமிழ்நாடு டைட்டில் ஃபுல்லா இங்கிலீஷ்ல, நல்ல பொழப்பு.! யாரு படு மொக்க என போட்டியில் நாளை வெளிவரும் 6 படங்கள்

குலேபகாவலி: 2018ல் கல்யாண் இயக்கத்தில் வெளிவந்த காமெடி படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ஆனந்த் ராஜ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் முனீஸ் தலைவனாய் ஆனந்த்ராஜ் ஏற்ற கதாபாத்திரம் படத்தில் சிறப்பாய் அமைந்திருக்கும். வில்லனாய் வலம் வந்த இவர் சீரியஸாய் காமெடி மேற்கொண்டு இருப்பார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ்: 2022ல் வடிவேலுவின் ரீ என்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் போதிய வரவேற்பு இன்றி தோல்வியை தழுவியது. இப்படத்தில் ராவ் ரமேஷ், ஆனந்த்ராஜ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தாஸ் என்னும் பணக்காரன், வீட்டு நாயை திருடும் வடிவேலு அந்த நாய்யாள் படாத பாடு பட்டு இருப்பார். மேலும் நாயின் சொந்தக்காரராய் ஆனந்த்ராஜும், வடிவேலும் இடம் பெறும் காட்சிகள் நகைச்சுவையை வெளிக்காட்டி இருக்கும்.

Also Read: எப்பதான் சாமி முடிப்பீங்க, பாகங்களாக வரும் 6 படங்கள்.. அடுத்தடுத்து அருள்நிதி கையில எடுக்கும் சூப்பர் ஹிட் படம்

Trending News