Actor Vijay: சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்ததனாலே பல மோசடி வேலைகளும் அதிகரித்து விட்டன. தற்போது சினிமா துறையிலும் இந்த மோசடி வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பெயர்களை உபயோகித்து பணம் வசூலிப்பதில் தொடங்கி, தற்போது மிகப்பெரிய மாபியா வேலைகளும் சினிமாவில் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஒட்டுமொத்த சினிமா உலகையும் சமீப காலமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் பாக்ஸ் ஆபீஸ் கலக்சன். படம் ரிலீஸ் ஆகி முதல் நாள் வசூல், ஒரு வார வசூல், 10 நாட்களில் இவ்வளவு வசூலாகி இருக்கிறது என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி அந்த படம் வெற்றி படமா அல்லது தோல்வி படமா என்பதை ரசிகர்களுக்கு சொல்லி விடுகிறார்கள். மேலும் வசூல் ஆகும் பணத்தையும் கனகச்சிதமாக வெளியில் சொல்லுகிறார்கள்.
இதுபோன்ற தகவல்களினால் கடந்த சில வருடங்களாக பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் முதலிடத்தில் இருப்பது நடிகர் விஜய் என்றும், இவருடைய அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கொண்டிருக்கின்றன எனவும், வசூல் ரீதியாக பார்த்தால் விஜய் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் எனவும் கோலிவுட்டில் ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் தற்போது இதன் பின்னால் இருக்கும் மிகப்பெரிய வியாபார திட்டம் வெளியாகியிருக்கிறது.
சமூக வலைத்தளங்கள் இன்று பொது மக்களால் அதிகமாக பயன்படுத்தும் ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனாலேயே மக்களை நம்ப வைக்கும் விதமாக ஒவ்வொரு துறையிலுமே பல வியாபார உத்திகளை இதன் மூலம் பயன்படுத்துகிறார்கள். இப்படித்தான் சினிமாவிலும் ஒரு நடிகரின் படம் ஹிட், இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது என சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இது போன்று போடப்படும் பதிவுகளுக்கு ஆயிரம் தொடங்கி லட்சம் வரை சம்பளமாக கூட கொடுக்கப்படுகிறதாம்.
ஒரு படம் பொருளாதார ரீதியாக ஹிட்டா அல்லது தோல்வியா என்பதை தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து தான் சரியாக சொல்ல வேண்டும். ஆனால் ஒரு தயாரிப்பாளர் தாமாக முன் வந்து இந்த படம் எனக்கு நஷ்டத்தை கொடுத்தது என்று சொல்லிவிட்டால் அவருக்கு அடுத்து படம் பண்ண பைனான்ஸ் கிடைக்காது. மேலும் சம்பந்தப்பட்ட நடிகரும் அந்த தயாரிப்பாளருக்கு பட வாய்ப்புகள் கொடுக்க மாட்டார். இதுவே அமைதியாக இருந்து விட்டால் நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்த படத்தையும் நடித்துக் கொடுத்து விடுகிறார்கள்.
இப்படித்தான் தளபதி விஜய் நடித்த அடுத்தடுத்த படங்கள் 100 கோடி வசூலை தாண்டியிருப்பதாக ஒரு மாய பிம்பம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் அவர் நடித்த பீஸ்ட் மற்றும் வாரிசு திரைப்படங்கள் ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. இருந்தாலும் படம் 100 கோடி வசூல் என தகவல்கள் வெளியாகி விட்டது. இதற்கு காரணம் இந்த வலைத்தள மாபியா கும்பல் தான்.