திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூப்பர் ஸ்டார் பட்டத்தை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்த ரஜினி.. நம்பர் ஒன் யாரு, சர்ச்சைக்கு வச்ச முற்றுப்புள்ளி

Jailer Audio Launch: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. மற்ற படங்களுக்கு எதிர்பார்க்காத அளவுக்கு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சினிமா பிரபலங்களாலும், ரஜினி ரசிகர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் ஜெயிலர் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து அதை சுற்றி நடந்த நிறைய சர்ச்சைகள் தான்.

அண்ணாத்தே திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை ரொம்பவே பொறுமையாக காத்திருந்து தேர்வு செய்தார். ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார் என்பது ஒட்டுமொத்த சினிமா உலகத்திற்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. அதே நேரத்தில் ரஜினி இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற திடீர் சர்ச்சையும் கிளம்பியது.

Also Read:விஜய்யால் நெல்சனுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. தயாரிப்பாளரிடம் ரஜினி சொன்ன ஒத்த வார்த்தை

ரஜினிகாந்த் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படப்பிடிப்பு வேலைகளில் தன்னை பிசியாக வைத்திருந்தார். அதே நேரத்தில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் ரிலீசானதில் இருந்து இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சை தமிழ் சினிமாவில் பூதாகரமாக மாறியது. ரஜினிகாந்த் தளபதி விஜய்க்கு தான் இந்த பாடலை பதிலடியாக கொடுத்து இருக்கிறார். பாடல் வரிகளில் இருப்பதெல்லாம் விஜய்க்காக தான் என்று கூட சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.

இந்த சர்ச்சைகளுக்கு நேற்று ரஜினி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது தான் எப்போதுமே இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை விரும்பியது இல்லை என்றும் பல வருடங்களுக்கு முன்பே இந்த பட்டத்தை எடுத்து விடுங்கள் எனக்கு இது வேண்டவே வேண்டாம் என்று சொல்லியதாகவும், எனக்கு இது பெரிய விஷயமே இல்லை என்றும் மேடையில் ரொம்பவும் வெளிப்படையாக நான் தூக்கி எறிந்த பட்டம் இது என்பது போல் சொல்லி இருக்கிறார்.

Also Read:பீஸ்ட் மாதிரி நேரத்தில் கோட்டை விட்ட நெல்சன்.. ஜெயிலர் சென்சருக்கு பின் பயத்தில் ரஜினி

காகம் மற்றும் பருந்து கதையை சொல்லி முடித்த சூப்பர் ஸ்டார், அடுத்து நான் யாரை காக்கா என்று சொன்னேன் என்று சமூக வலைத்தளங்களில் பேச ஆரம்பித்து விடுவார்கள். குறைக்காத நாயும் இல்ல, குறை சொல்லாத ஊரும் இல்ல, நம்ம வேலைய பாத்துட்டு போயிட்டே இருக்கணும் என்று சூப்பர் ஸ்டார் பட்டத்தை சுற்றி எழுந்த போட்டிகளுக்கும், சர்ச்சைகளுக்கும் மொத்தமாக பதிலடி கொடுத்திருக்கிறார் ரஜினி.

நேற்றைய விழா என்பது பேருக்குத்தான் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது போல் இருந்தது. மற்றபடி அந்த மேடையில் பேசிய பலரும் விஜய்யை மறைமுகமாக தாக்குவது போல் தான் பேசி இருந்தார்கள். நான் தூக்கிப்போட்ட பட்டம் இது என்று ரஜினி சொன்ன பின்பு இனி அதை யார் உபயோகப்படுத்தினால் எனக்கென்ன என்று பதிலளித்தது போல் தான் இருக்கிறது.

Also Read:சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு.? ரஜினியை முன்னிறுத்தி சன் பிக்சர்ஸ் செய்யும் பாலிடிக்ஸ்

Trending News