திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நீலாம்பரி முன் அசிங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட ரஜினி.. என்னதான் சொல்லு தலைவருக்கு நிகர் அவர் மட்டும்தான்

Super Star Rajini: தமிழ் சினிமாவில் 72 வயதிலும் எனர்ஜி குறையாமல் சூப்பர் ஸ்டாராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் ரஜினி, தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி, நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது ரஜினி மேடையில் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, ‘நீலாம்பரி முன்னாடி இந்த படையப்பா மானமே போச்சு!’ என பேசி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

Also Read: 72 வயதிலும் வரிசை கட்டி நிற்கும் தயாரிப்பாளர்கள்.. ஜெயிலர் மேடையில் விஜய்யை சீண்டிப்பார்க்கும் கலாநிதி மாறன்

இப்போது ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடி தமன்னா இல்லை, கதாநாயகியாக ரம்யா கிருஷ்ணா தான் நடித்திருக்கிறாரா என்ற கேள்வியே ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்குப் பிறகு எழுந்துள்ளது. ஏனென்றால் தொலைந்து போன தனது மகளை தேடும் அப்பாவின் கதை தான் ஜெயிலர். இதில் பேரனுடன் ரஜினிகாந்த் இருக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அது மட்டுமல்ல ரஜினி ஹீரோவாகவும் ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவும் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் படையப்பா. இந்த படத்திற்குப் பிறகு பாபா படத்தில் நீலாம்பரி ஆகவே ரம்யா கிருஷ்ணன் ஒரு சின்ன கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு நீண்ட வருடத்திற்கு பிறகு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளார்.

Also Read: சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஆசையில் தோனி.. இப்ப வரை விஜய் பச்சை கொடி காட்டாததற்கு காரணம்

இதனால் ஜெயிலர் படப்பிடிப்பின் போது ரம்யா கிருஷ்ணனுடன் நடித்த அனுபவத்தையும், தான் பல்பு வாங்கிய விஷயத்தை ரஜினி பேசியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதாவது ஜெயிலர் பட ஷூட்டிங்கில் ரம்யா கிருஷ்ணன் உடன் இருந்த ஒரு சின்ன சீனில் அவரை எதிர்கொள்ள முடியாமல் 8 டெக் வாங்கி விட்டேன்.

நீலாம்பரி கிட்ட போய் படையப்பா இப்படி அசிங்கப்பட்டுவிட்டேன். என்ன படையப்பா நீலாம்பரி-கிட்ட போய் இப்படி அசிங்கப்பட்டு விட்டீர்களே! என எனக்கு நானே பேசிக் கொண்டேன் என்று தனக்குள் இருந்த விஷயத்தை ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்டதும் அங்கு இருந்த ரம்யா கிருஷ்ணனும் ரஜினியை பார்த்து சிரித்தார்.

Also Read: சூப்பர் ஸ்டார் பட்டத்தை துச்சமாக நினைத்து தூக்கி எறிந்த ரஜினி.. நம்பர் ஒன் யாரு, சர்ச்சைக்கு வச்ச முற்றுப்புள்ளி

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் இந்த வயதிலும் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என மேடையில் தன்னுடைய கெத்தை காட்டாமல் உண்மையை பேசி அசால்ட்டு காட்டியது, தலைவருக்கு நிகர் தலைவர் தான் என அங்கு இருப்பவர்களை கெத்து காட்ட வைத்தது. அது மட்டுமல்ல ரஜினியின் பேச்சைக் கேட்ட பிறகு நிச்சயம் நீலாம்பரியின் ஆட்டத்தை ஜெயிலர் படத்தில் பார்க்கப் போவது கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

Trending News