வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

அப்படி இருந்த சந்தானம் இப்படி ஆயிட்டார்.. ஒரே நாளில் 4 பட சூட்டிங், அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

Comedian Santhanam: விஜய் டிவியில், காமெடி நிகழ்ச்சி மூலம் தன் திறமைக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, அதன் பின் சினிமாவில் வாய்ப்பு பெற்று சிறந்த காமெடியனாய் வலம் வந்தவர் சந்தானம். அடுத்தடுத்து பல படங்களில், நகைச்சுவையில் கலக்கிய இவரா இப்படி ஆயிட்டார் என சொல்லும் அளவிற்கு நிகழ்ந்த சம்பவம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

வடிவேலு, விவேக் நகைச்சுவைக்கு பிறகு தமிழ் சினிமா மார்க்கெட்டில் காமெடியனாய் பெரிதாய் பேசப்பட்டவர் சந்தானம். தன் நடிப்பிற்கு ஏற்ற வாய்ப்பை அடுத்தடுத்த படங்களில், பெற்று வந்த இவர் ஒரே நாளில் ஐந்தாறு படங்களிலும் நடித்திருக்கிறார்.

Also Read: சன் டிவி வெளியிடும் ஜெயிலர் பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? ஜெட் வேகத்தில் எகிற போகும் டிஆர்பி

அப்படி என்றும் பிசியாக இருந்து கொண்டிருந்த இவருக்கு இந்த நிலைமையா என கேட்கும் அளவிற்கு இவரின் முயற்சி இவரை புரட்டிப்போட்டு உள்ளது. அவ்வாறு சலிப்பை பார்க்காமல் ஒரே நாளில் நான்கு பட ஷூட்டிங்கில் நடித்ததால் ஒரு கட்டத்திற்குப் பிறகு டிப்ரஷன் ஆகிவிட்டார்.

அந்த 4 படங்கள் தான் தலைவா, வீரம், சிங்கம் 3, ஐ. தலைவா படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றதால் அங்கும், வீரம்- ஹைதராபாத்திலும், சிங்கம் 3- தூத்துக்குடியிலும், ஐ-எண்ணூரிலும் படம் மேற்கொண்டதால் அங்கும் இங்கும் அலைந்தே ஒரு வழியாகிவிட்டாராம்.

Also Read: நம்ம சினிமாவில் வெற்றியை ருசிக்க போராடும் அக்கட தேசத்து 5 நடிகர்கள்.. கண் கொத்தி பாம்பாக சங்கரை வட்டமிடும் ஹீரோக்கள்

அவ்வாறு ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு கதாபாத்திரம் பண்ண வேண்டி இருந்ததாம். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு ஊருக்கும் பிளைட் பிடித்து பறந்து வருவாராம். படப்பிடிப்பு ஒரே ஊரில் இருந்தால் கூட பரவாயில்லை, ஒன்னொன்னும் ஒரு ஊராக இருந்ததால் அலைந்தே திரிந்து ஒரு கட்டத்தில் டிப்ரஷன் ஆகிவிட்டாராம்.

அந்த அளவிற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கஷ்டப்பட்டு தன் படங்களை மேற்கொண்டு இருக்கிறார் சந்தானம். ஆனால் அப்படியே வாழ்க்கை இவரை தலைகீழாய் புரட்டிப் போட்டது. புது முயற்சி எடுப்பதாக நினைத்து இனி படம் நடித்தால் ஹீரோவா தான் நடிப்பேன் என இவர் பிடிவாதமாக நின்றதால், என்றும் பிசியாக இருந்த இவர் கொஞ்சம் டல் அடித்து விட்டார். தற்பொழுது தன் கம் பேக் படங்களுக்கு ஆர்வம் கட்டி வருகிறார்.

Also Read: ஜிவி பிரகாஷ் வேண்டாம் நீங்க வாங்க.. பல வருடங்களுக்குப் பிறகு இணையும் ரெண்டு ராஜாக்கள்

Trending News