திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முத்துவேல் பாண்டியனுக்காக ரெடியாகும் குட்டிக்கதை.. உங்களுக்கு சலச்சவன் நான் இல்ல என்ன முடிவு

 Jailer Movie: இப்போது எல்லாம் ஒருவர் மீது ஒருவர் கொண்ட ஆதங்கத்தை குட்டி கதையாக சொல்ல தொடங்கி விட்டார்கள். மேலும் பகையை வளர்க்கும் விதமாய் நீ பெரிதா, நா பெரிதா என போட்டி போட்டு கொள்ளும் முத்துவேல் பாண்டியனுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் குட்டி கதை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

தற்பொழுது ரசிகர்களிடையே பெரிதாய் எதிர்பார்க்கப்படும் படங்கள் தான் ஜெயிலர் மற்றும் லியோ. போட்டிக்கு போட்டியாய் இதன் பாடல்கள் வெளியாகி பரபரப்பை கூட்டின. மேலும் ஜெயிலர் படப்பிடிப்பு, முழுமையாய் முடிந்துள்ள நிலையில், இதன் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

Also Read: குக் வித் கோமாளி 4 போட்டியாளர்கள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம்.. வாயை பிளக்க வைத்த சிவாங்கி

அதை தொடர்ந்து இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் ஆக வரும் ரஜினி இப்படம் குறித்து பேசிய பின்னர் குட்டி கதை ஒன்று கூறி வந்தார். காக்கா பருந்து வைத்து கதை சொன்ன ரஜினி, விஜய்யை சீண்டி பார்க்கிறார் என சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

அவர் எதை வைத்து கூறினாரோ, என்னவோ ஆனால் இது உண்மையாக இருக்கும் என ஒரு புறம் இருந்தாலும் தலைவர் அவ்வளவு எளிதில் யாரையும் குறிப்பிட்டு பேச மாட்டார். ஒருவேளை இது உண்மையாக இருந்தாலும், ஏதோ ஒரு விஷயத்தில் தளபதி ரஜினியை கஷ்டப்படுத்தி இருக்கலாம்.

Also Read: அப்படி இருந்த சந்தானம் இப்படி ஆயிட்டார்.. ஒரே நாளில் 4 பட சூட்டிங், அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

இது ஒரு புறம் இருந்தாலும் ரஜினி, விஜய்யின் பீஸ்ட் படம் குறித்து பேசுகையில் இப்படம் வணிக ரீதியாக வெற்றி அடைந்ததை குறிப்பிட்டு மேடையில் போட்டு உடைத்தார். இது போன்ற மனசு தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு செல்கிறது எனவும் கோலிவுட் வட்டாரம் கூறி வருகிறது.

மேலும் இப்பிரச்சனையை பெரிதாக்கவே லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிக்கு பதிலடி கொடுக்க விஜய் கண்டிப்பாக ஒரு குட்டி கதை சொல்லுவார் என எதிர்பார்த்து புரளி எழும்பி வருகிறது. இது போன்ற பிரச்சனையை பூதாகரமாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல என எண்ணும் அளவிற்கு இச்சம்பவம் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

Also Read: டிடி ரிட்டன்ஸ் சந்தானத்துக்கு வொர்க் அவுட் ஆனதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ரிப்போர்ட்

Trending News