திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மறக்க முடியாத சந்தானத்தின் 6 கேரக்டர்கள்.. பார்த்தாவுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை

Actor Santhanam: நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான காமெடி களத்தை உருவாக்கியவர். சமீப காலமாக அவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், அவருடைய காமெடி காட்சிகள் இன்று வரை பிரபலமாக இருக்கிறது. புதிதாக அவர் பேசிய ஒரு சில வார்த்தைகள் மற்றும் கேரக்டர்கள் மக்களின் மனதில் அப்படியே நின்று விட்டது. இந்த 6 கேரக்டர்கள் சந்தானத்தின் நடிப்பில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்றாகும்.

பாஸ் என்கிற பாஸ்கரன்- நல்ல தம்பி: இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தில் அவர் காமெடியன் என்பதை தாண்டி இரண்டாவது ஹீரோ போல் நடித்து இருப்பார். சலூன் கடை வைத்திருக்கும் நல்ல தம்பி என்னும் கேரக்டரில் ஆர்யாவின் நண்பராக வரும் இவர், படம் முழுக்க ஹீரோ என்று கூட பார்க்காமல் ஆர்யாவை ஒவ்வொரு காட்சியிலும் பங்கமாக கலாய்த்து இருப்பார். இந்த படத்தில் இவர் பேசிய அப்பாடக்கர் என்னும் வசனம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.

Also Read:அப்படி இருந்த சந்தானம் இப்படி ஆயிட்டார்.. ஒரே நாளில் 4 பட சூட்டிங், அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

ராஜா ராணி – சாரதி: ஆர்யா மற்றும் சந்தானம் கூட்டணியில் மற்றுமொரு வெற்றியை பார்த்த திரைப்படம் தான் ராஜா ராணி. படம் முழுக்க ஆர்யாவுடன் வரும் சந்தானம் பிளாஷ் பேக் காட்சிகளாக இருக்கட்டும், ஆர்யாவின் திருமணத்திற்கு பின்வரும் காட்சிகளாக இருக்கட்டும் அத்தனையிலும் காமெடியில் கலக்கி இருப்பார்.

ஆல் இன் ஆல் அழகுராஜா: ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் மற்றும் கார்த்தி கூட்டணியில் நகைச்சுவையில் பட்டையை கிளப்பிய திரைப்படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இதில் கேபிள் டிவி ஆபரேட்டராக வரும் கல்யாணம் , பிளாஷ் பேக் காட்சியில் வரும் அவருடைய அப்பா கேரக்டர் காளி என அத்தனையுமே வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தாலும், ஒரே சீனில் கரீனா சோப்ராவாக வந்து காமெடியில் மிரட்டி இருந்தார்.

சிவா மனசுல சக்தி – விவேக்: சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் ஜீவா மற்றும் சந்தானத்தின் காமெடி கெமிஸ்ட்ரி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஜீவாவின் நண்பன் கேரக்டரில் வரும் விவேக் மற்ற நண்பர்களைப் போல நண்பனுக்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்று சென்டிமென்ட் வேலைகள் காட்டாமல், எதார்த்தமாக பேசியதன் மூலம் இந்த படத்தில் காமெடி காட்சிகள் வெற்றி பெற்றது.

Also Read:டிடி ரிட்டன்ஸ் சந்தானத்துக்கு வொர்க் அவுட் ஆனதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ரிப்போர்ட்

சிறுத்தை – காட்டுப்பூச்சி: சந்தானம் மற்றும் கார்த்தி காமெடி கெமிஸ்ட்ரியில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சிறுத்தை. இதில் சந்தானம் காட்டுப் பூச்சி என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். அவருடைய பேச்சிலிருந்து நடை உடை பாவனை முதற்கொண்டு உண்மையாகவே திருடனை பிரதிபலிப்பது போல் இருக்கும். கார்த்தியும், சந்தானம் லெவலுக்கு இறங்கி காமெடி காட்சிகளில் பட்டையை கிளப்பி இருப்பார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி – பார்த்தா: சினிமா ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்படும் கேரக்டர் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் பார்த்தா. இந்த படத்தில் பேருக்குத்தான் உதயநிதி ஹீரோ போல் இருக்கும். மற்றபடி படத்தின் மொத்த வெற்றிக்கும் காரணம் சந்தானம் தான். சமீபத்திய பேட்டி ஒன்றில் இதில் வரும் பார்த்தசாரதி கேரக்டர் உண்மையிலேயே தன்னுடைய நண்பர் ஒருவரின் பிரதிபலிப்பு எனவும், அதைத்தான் தான் திரையில் நடித்ததாகவும் சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருந்தார் சந்தானம்.

Also Read:சக நடிகர்களை தூக்கி விட்டு அழகு பார்த்த 5 ஹீரோக்கள்.. சிம்புவிற்கு நிகராக போட்டி போடும் சந்தானம்

Trending News