Actor Simbu: வித்தியாசமான முறையில் வெளிவரும் படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடும். அதிலும் சென்டிமென்ட்டாக தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களுக்கு நல்ல வரவேற்பும் உண்டு. அந்த வகையில் மக்களுக்காக உயிரை தியாகம் செய்யும் படியான கதாபாத்திரங்கள் இன்றளவும் மறக்க முடியாத வகையில் இருக்கிறது. அப்படிப்பட்ட சிறந்த ஐந்து கதாபாத்திரங்களை பற்றி இங்கு காண்போம்.
தசாவதாரம்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் பத்து மாறுபட்ட வேடங்களில் நடித்த இப்படத்தில் வின்சென்ட் பூவராகன் என்ற ஒரு கதாபாத்திரமும் இருக்கும். சமூக ஆர்வலராக வரும் அந்த கேரக்டர் இறுதியில் சுனாமி வரும்போது வில்லனின் குழந்தைகளை காப்பாற்றி விட்டு இறந்து போவது போல் காட்டப்பட்டு இருக்கும். உண்மையில் படத்தை பார்த்தவர்கள் பலரையும் கலங்க வைத்த ஒரு முக்கியமான காட்சி அதுதான். அதில் கமலுடைய நடிப்பு வேற லெவலில் இருக்கும்.
Also read: இந்த வருடம் ஒளிப்பதிவில் பின்னிய 5 படங்கள்.. பிரம்மிக்க செய்த விடுதலை வெற்றிமாறன்
வானம்: க்ரிஷ் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சிம்பு, தில்லை ராஜா என்னும் கேபிள் ராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பணக்கார பெண்ணை காதலிக்கும் இவர் தன்னை ஒரு பணக்காரராக காட்டிக் கொள்வார். அதற்காக பல தில்லுமுல்லு வேலைகளையும் இவர் செய்வார்.
இப்படியாக செல்லும் இப்படத்தில் ஒரு மருத்துவமனை தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிற்குள் வரும். அதில் சிக்கிக் கொள்ளும் மக்களில் ஒருவராக இருக்கும் சிம்பு மற்ற உயிர்களை காப்பாற்றுவதற்காக தன் உயிரை தியாகம் செய்வார். உண்மையில் அந்த இறுதி காட்சியில் சிம்புவின் மரணம் மனதை கனக்க வைக்கும் வகையில் இருக்கும்.
Also read: சகட்டு மேனிக்கு வேலையை பார்த்து வைத்திருக்கும் ஷங்கர்.. கில்லாடித்தனமாக எடுத்த முடிவு
சீதாராமம்: துல்கர் சல்மான், மிருணால் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் இப்படம் வெளிவந்தது. இதில் ராம் என்ற கேரக்டரில் வரும் ஹீரோ ராணுவ வீரராக இருப்பார். யாரும் இல்லாத ஒருவராக இருக்கும் இவரை இளவரசியாக இருக்கும் நூர்ஜஹான், சீதா என்ற பெயரில் காதலிப்பார்.
இப்படியாக செல்லும் கதையில் ராம் ஒரு குழந்தையை காப்பதற்காக எதிரி நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொள்வார். இறுதியில் சில துரோகங்களினால் சிறையில் இருந்து வெளிவர முடியாமல் இறந்தும் போவார். அந்த வகையில் கடைசி வரை ராம் சீதா இணையாமல் போனது ரசிகர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Also read: இவர் தேறவே மாட்டார் என ரஜினி நினைத்த நடிகர்.. 4 படங்களில் தலைவரை மிரட்டிய நடிப்பு சூறாவளி
2018: மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற இப்படம் தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. டோவினோ தாமஸ், நரேன், வினீத் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கேரளாவை புரட்டி போட்ட ஒரு உண்மை சம்பவத்தின் கதையாகும்.
வெள்ளத்தில் மாட்டிக்கொள்ளும் மக்களை மீட்கும் முயற்சியில் அரசுக்கு உதவியாக பொது மக்களும் இறங்குவார்கள். அப்போது முன்னாள் ராணுவ அதிகாரியாக இருக்கும் டோவினோ தாமஸ் தன் உயிரை கொடுத்து மக்களை காப்பாற்றுவார். ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக இந்த காட்சி எடுக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறாக இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் தன் உயிரை பொருட்படுத்தாமல் பிறரை காப்பாற்றும் படி அமைக்கப்பட்டிருக்கும். அதனாலேயே இந்த கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.