வாய்ப்பு தராமல் விரட்டி விட்ட வடிவேலு.. வெட்ட வெளிச்சமாக்கிய நடிகைக்கு வந்த மிரட்டல்

Actor Vadivelu: ஒரு நடிகனாக நம்மை சிரிக்க வைத்தாலும் வடிவேலு பற்றி வெளிவராத சர்ச்சைகளே கிடையாது. அந்த அளவுக்கு இவர் ஒரு பிரச்சனை பார்ட்டி என பல பிரபலங்களும் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர். அப்படித்தான் தற்போது ஒரு நடிகையும் இவரை பற்றி ஒரு விஷயத்தை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

தமிழில் வடிவேலு, சூரி, சந்தானம் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை பிரேம பிரியா. ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் இவரின் காமெடி அசத்தலாக இருக்கும். அந்த வகையில் வடிவேலு இவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை பறித்ததாக இவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: சூப்பர் ஸ்டாரை காயப்படுத்திய 5 பேர்.. வடிவேலு செய்த அதே தவறை செய்த மனோரமா

அதாவது நடிப்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இவர் செல்லும் போது வடிவேலு இவர் வேண்டாம் வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று கூறுவாராம். இப்படி பல படங்களில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒரு பேட்டியில் இவர் வெளிப்படையாக கூறியது பூகம்பமாக வெடித்தது. அதில் வடிவேலு பற்றிய பல நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தது. அந்த சமயத்தில் பல பேர் இவரை மிரட்டும் விதமாக போன் செய்து இருக்கின்றனர். அதிலும் ஒரு இயக்குனர் நீங்கள் சொன்ன விஷயத்திற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ போடுங்கள் என்று கூறினாராம்.

Also read: வடிவேலு மனுஷனே கிடையாது,10 வருஷம் பட்டும் திருந்தல.. கூனி குறுக வைத்த விஜயகாந்த்

ஆனால் பிரேம பிரியா, வடிவேலு எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் தடுத்தது உண்மை. அதனால் எந்த வீடியோவும் நான் போட மாட்டேன் என்று தைரியமாக கூறி இருக்கிறார். மேலும் என்னிடம் பேசிய அந்த இயக்குனர் வடிவேலுவுக்கு தெரிந்து தான் பேசினாரா என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல பிரச்சனைகளை சந்தித்த பிரேம ப்ரியா கொரோனா காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். அதிலும் இவருடைய அப்பா, அக்கா, கணவர் என ஒவ்வொருவரும் அடுத்தடுத்து இறந்து போயிருக்கிறார்கள். இது குறித்து பேசிய அவர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து நடிப்பில் கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also read: கொஞ்சம் கூட செட் ஆகாத கதாபாத்திரத்தில் நடித்த 5 ஹீரோக்கள்.. விட்டதை பிடிக்க வேறு யுத்தியை கையாளும் வடிவேலு