வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

வெற்றிமாறனுடன் பலமுறை ஏற்பட்ட ரகசிய சந்திப்பு.. வாடிவாசலை நம்பிய சூர்யாவின் கனவில் விழுந்த இடி

Vaadivasal: தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக பார்க்கப்படும் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இன்னும் வெற்றிமாறன் தன்னுடைய விடுதலை 2 படத்தில் பிஸியாக இருப்பதால், அவர் எப்போது வருகிறாரோ அப்பொழுது வாடிவாசல் படம் சூட்டிங் வைத்திருக்கலாம் என்று சூர்யா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் .

வாடிவாசல் படம் சூர்யாவிற்கு மிக முக்கியமானது. ஏனென்றால் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்திற்காகவே அவர் இரண்டு ஜல்லிக்கட்டில் காளைகளுடன் பழகி வருவதாகவும் அந்த படத்திற்கு தன்னையே தயார்படுத்திக் கொள்வதற்காக சில வேலைகளிலும் இறங்கி இருக்கிறார்.

Also Read: எட்ட முடியாத உயரத்தில் ரஜினி, விஜய்க்கு போட்டி அந்த நடிகர் தான்.. வெளிப்படையாக பேசிய பிரபலம்

இதற்காக கால அவகாசம் எடுப்பதால் தான் சூர்யா, வெற்றிமாறன் இருவரும் வெவ்வேறு படங்களில் கமிட் ஆனார்கள். கங்குவா முடிந்த கையோடு வெற்றிமாறன் வரவில்லை என்றால் சூர்யா, சுதா கொங்கரா படத்திற்கு செல்லவிருக்கிறார்.

ஆனால் காத்திருந்த அவருக்கு இனிமேல் இடியாய் இப்பொழுது பல விஷயங்கள் நடந்து வருகிறது. விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் மூன்று முறை ரகசியமாக வெற்றிமாறனை சந்தித்து இருக்கிறார். ஏற்கனவே விஜய் வேறு வெற்றிமாறனுக்கு தூது விட்டு இருக்கிறார்.

Also Read: தளபதி 68ல் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திய ஜோதிகா.. சாய்ஸை, சான்ஸாக மாற்றிய செல்ல ஹீரோயின்

ஒருவேளை அடுத்த படத்திற்கான ஏற்பாடா? இல்லை விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் இப்பொழுது படத்தை தயாரிக்கவும் செய்கிறார். அதன் மூலமாக ஏதாவது இவர்களுக்குள் கூட்டணியா என்று தெரியவில்லை. மூன்று முறை ரகசியமாக நடந்த இந்த சந்திப்பு எதற்காக என்பது அவர்கள் தெரிவித்தால் மட்டுமே தெரியும்.

இருப்பினும் விஜய்- வெற்றிமாறன் கூட்டணி இணைந்தால் நிச்சயம் தளபதியை வேறொரு கோணத்தில் பார்க்க முடியும் என்பதால், அது நடந்தாலும் சந்தோஷம்தான் என தளபதி ரசிகர்கள் குஷி ஆகின்றனர். அதே சமயம் ஏற்கனவே வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தள்ளிப்போவதுடன் சூர்யா கனவில் இடி விழுந்தது போல் ஆகிவிடும்.

Also Read: தெரியாத்தனமாக சூழ்ச்சி வலையில் மாட்டிய லியோ படம்.. வசூலில் பின்தங்கி போகும் விஜய்

- Advertisement -spot_img

Trending News