வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விக்னேஷ் சிவனுக்கு உச்சகட்ட பயத்தை காட்டி கவர்ச்சி ஆட்டம் போட்ட நயன்தாரா.. வீடியோ பார்த்தாலே பக்குனு இருக்கு

நடிகை நயன்தாரா ராஜா ராணி திரைப்படம் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு அவ்வளவாக கவர்ச்சி காட்டாமல், தனக்கென ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். மேலும் இனிமேல் நயன்தாரா இளம் ஹீரோயின் போல் கவர்ச்சி, குத்தாட்டம் என எல்லாம் இறங்க மாட்டார், தனி கதாநாயகியாகவே நடித்து விடுவார் என்று ரசிகர்களும் நினைத்திருந்தார்கள்.

நயன்தாராவின் காதல் கணவர் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கூட சமந்தா எக்கச்சக்க கவர்ச்சி காட்டிய போதும், நயன்தாரா புடவை, சுடிதார் என ரொம்பவும் அடக்கி வாசித்தார். இதற்கு முழுக்க காரணம் அவருடைய கணவர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் என சொல்லப்பட்டது. நயன்தாரா கவர்ச்சியாக நடிப்பது அவருக்கு விருப்பமில்லை என்பது போல் தெரிகிறது.

Also Read:அட்லீக்கு டிமிக்கி கொடுத்த விஜய்.. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என எஸ்கேப் ஆன தளபதி

நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் ரிலீசாக இருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா நடித்திருக்கிறார். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தில் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி விட்டன. இதில் ஹையோடா என்ற பாடலுக்கு நயன்தாரா, ஷாருக்கானுடன் இணைந்து தாராளமாக ரொமான்ஸ் செய்திருந்தார்.

நயன்தாரா, ஷாருக்கான் உடன் இணைந்து ரொமான்ஸ் செய்திருப்பது ரசிகர்களிடையே நெகட்டிவ் கமெண்ட்களாக பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று படத்தின் மூன்றாவது பாடலான ராமையா வஸ்தாவையா பாடல் ரிலீஸ் ஆனது. ரொமான்ஸில் ஆட்டம் காட்டிய நயன்தாரா இந்த பாட்டில் கவர்ச்சியில் கதிகலங்க வைத்துவிட்டார். திருமணத்திற்கு பிறகு இவர் இப்படி களமிறங்கி இருப்பது எல்லோருக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Also Read:அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

நயன்தாராவை பொருத்தவரைக்கும் திருமணத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் மொத்தமாக போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் இனி இயக்குனர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டு இப்படி இறங்கிவிட்டார் என தெரிகிறது. மேலும் பாலிவுட் சினிமாவை பொறுத்த வரைக்கும் ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சிக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது.

பாடல் வீடியோவின் தொடக்கத்திலேயே சிகப்பு நிற சீவ்லஸ் உடை அணிந்து நயன்தாரா நடந்து வருவது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் பிறகு நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இப்படி ஓவர் ரொமான்ஸ், ஓவர் கவர்ச்சி காட்டி வரும் மனைவியை பார்த்து விக்னேஷ் சிவனுக்கு தான் இப்போது கதி கலங்கி இருக்கிறது.

 

Trending News