உச்சாணி கொம்புக்கு ஏறிவிட்ட நயன்தாரா.. படம் முடிந்ததும் வேலையை காட்டிய லேடி சூப்பர் ஸ்டார்

Actress Nayanthara: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய மார்க்கெட் சரியாமல் நிலை நிறுத்தியுள்ளார். நயன் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார்.

இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ஜவான் திரைப்படம்  ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

Also Read: நடிக்க தெரியலன்னு சிம்பு படத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட நயன்தாரா.. ரெண்டு ஹிட் கொடுத்து மூக்கு உடைத்த சம்பவம்

இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதியான இன்று படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய விழா சென்னையில் நடைபெற உள்ளது. தாம்பரம் அருகில் உள்ள சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜில் ஜவான் படத்தின் ஃப்ரீ ரிலீஸ் பங்க்ஷன் இன்று நடைபெறுகிறது.

அதன் பின் இதனுடைய அடுத்த விழாக்கள் எல்லாம் வெளிநாட்டில் தான். துபாயில் ஒரு பிரம்மாண்ட இடத்தை பிளான் செய்து கொண்டிருக்கிறார்கள் ஜவான் பட குழு.தற்போது ஷாருக்கான் சென்னையில் நடக்கும் இந்த விழாவிற்காக சாய்ராம் காலேஜ்-க்கு வருகிறார்.

Also Read: மொட்ட மண்டையுடன் ஜவான் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்.. அட்லி கேரியருக்கு நாள் குறிச்சாச்சு!

ஆனால் எவ்வளவோ சொல்லியும் நயன்தாரா வர மறுக்கிறார். ஷாருக்கான் கூப்பிட்டும் கூட முடியாது என உச்சாணி கொம்புக்கு ஏறிவிட்டாராம். ஆனால் இதே நயன்தாரா தான், தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரிக்கும் படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு மட்டும் வரிஞ்சு கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்.

வேறு தயாரிப்பாளர்களின் படங்களில் அவர் நடிக்கும் போது மட்டும் அந்தப் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர முடியாது என கெத்து காட்டுகிறார். அதேபோல் தான் இப்போது ஜவான் படத்திற்காக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்த போதும், ‘என் வேலை முடிச்சாச்சு, போய் உங்க சோலிய பாருங்கய்யா!’ என அடாவடி காட்டுகிறார்.

Also Read: நயன்தாராவுக்கு முன் வாரிசு நடிகையை வெறித்தனமாக காதலித்த பிரபுதேவா.. நாட்டாமை என்ன செஞ்சாரு தெரியுமா?