Actor Vijay: பொதுவாக நிப்போட்டிஸம் என்பது பாலிவுட்டில் தான் அதிகமாக இருப்பதாக ஒரு விமர்சனம் எழுந்து வருகிறது. பாலிவுட்டில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்களை ரசிகர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இதனால் பெரிய நடிகர்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.
அதோடு மட்டுமில்லாமல் சுஷாந்த் சிங் தற்கொலைக்கும் நிப்போட்டிஸம் தான் காரணம் என்ற ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. பொதுவாக சினிமா மற்றும் அரசியலில் வாரிசுகள் வருவது எப்போதுமே பேசுபொருளாகத்தான் இருந்து வருகிறது. உதயநிதி அரசியலுக்கு வந்த போதும் இதே பேச்சு இருந்தது.
Also Read : ஆரம்பமே அமர்க்களப்படுத்திய ஜேசன் சஞ்சய்.. லைக்கா கூட்டணியின் பின்னணி காரணம்
ஆனால் இதில் எந்த தப்பும் இல்லை என்பது ஒரு தரப்பின் விவாதமாக இருக்கிறது. ஏனென்றால் குழந்தையிலிருந்து அரசியல் மற்றும் சினிமா குடும்பத்தில் இருக்கும் வாரிசுகள் அதைப் பார்த்து வளர்வதால் ஈடுபாடு இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதனால் அந்தத் துறையை தேர்ந்தெடுப்பதிலும் தவறு இல்லை.
இதைக் குறை சொல்ல முடியாது என்று கூறினாலும் மற்றொருபுறம் திறமை இருந்தும் இதுபோன்ற வாரிசுகளால் சிலர் பாதிக்கப்படுவதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். இப்போது பாலிவுட்டை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இந்த சர்ச்சை வெடிப்பதற்கான காரணம் விஜய்யின் மகன் சமீபத்தில் இயக்குனராக அவதாரம் எடுத்தது தான்.
Also Read : சந்திரமுகி 2வில் லாரன்ஸ் வாங்கிய சம்பளம்.. அசால்டா வியாபாரம் பண்ணி கெத்து காட்டிய லைக்கா
அதாவது எஸ்ஏ சந்திரசேகர் இயக்குனராக முத்திரை பதித்த நிலையில் தனது மகனை நடிகர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் தனது படங்களில் நடிக்க வைத்தார். அதேபோல் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் தனது மகனுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார் எஸ்ஏசி. ஆனாலும் விஜய் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தனது கடின உழைப்பால் தான் இப்போது நிலையான இடத்தில் இருக்கிறார்.
இப்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா தயாரிப்பில் தனது படத்தை இயக்க இருக்கும் செய்தி சும்மா இருந்த வாய்க்கு வெத்தலை போட்டது போல் அமைந்துவிட்டது. ஆகையால் தமிழ் சினிமாவிலும் நிப்போட்டிஸம் அதிகரித்து உள்ளதாக சிலர் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கின்றனர். என்னதான் இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை.