திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெயிலர் போரடிச்சு போச்சு.. அட்லி பக்கம் வண்டியை திருப்பிய ப்ளூ சட்டை

Atlee-Blue Sattai Maaran: டாப் ஹீரோக்களை கலாய்ப்பதை மட்டுமே அதி முக்கிய வேலையாக பார்த்து வந்த ப்ளூ சட்டை மாறன் சமீப காலமாக ரஜினியை மட்டுமே ட்ரோல் செய்து வந்தார். அதிலும் ஊர் உலகமே கொண்டாடிய ஜெயிலர் படத்தை இவர் எந்த அளவுக்கு பங்கம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதிலும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியதிலிருந்து படம் வெளியான பிறகு வரும் வசூல் ரிப்போர்ட் வரை இவர் ஒவ்வொன்றையும் குறை சொல்லி ட்வீட் போட்டு வருகிறார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தகுந்த பதிலடி கொடுத்தாலும் தொடர்ந்து இதே வேலையை செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் தற்போது வண்டியை அட்லி பக்கம் திருப்பி இருக்கிறார்.

Also read: ஓடிடி ஜெயிலர் வசூலுக்கு ஆப்பு அடித்த விஷமிகள்.. என்னடா இது கலாநிதிக்கு வந்த சோதனை

எத்தனை நாளைக்கு தான் ஜெயிலரை வச்சு ஓட்டுறது ரொம்ப போர் அடிக்குது என்ற கதையாக அவர் இப்போது அட்லீயை வம்புக்கு இழுத்துள்ளார். அதாவது ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜவான் விரைவில் வெளிவர இருக்கிறது.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் நடிகை பிரியாமணி பேசிய ஒரு விஷயத்தை தான் இப்போது ப்ளூ சட்டை மாறன் நக்கல் அடித்துள்ளார். அதாவது அட்லி ஜவான் பட கதையை தன்னிடம் ஜூம் காலில் கூறியதாக பிரியாமணி தெரிவித்து இருந்தார்.

Also read: ஜவானால் மீண்டும் அசிங்கப்பட போகும் அட்லி.. விஜயகாந்த் படத்தை காப்பி அடித்ததால் வந்த விளைவு

மேலும் கதையை கேட்டதுமே தனக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும், ஷாருக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் நடித்தது எதிர்பாராத விஷயம் தான் என்று அவர் கூறியிருந்தார். இதை தான் தற்போது ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் என்னது கதையா என கேட்டு அட்லீயை பங்கம் செய்துள்ளார்.

blue-sattai-maaran-tweet
blue-sattai-maaran-tweet

ஏனென்றால் அட்லி ஒரு காப்பி இயக்குனர் என்று பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறார். அதற்கேற்றார் போல் அவர் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை படங்களும் பழைய படங்களின் சாயலாக தான் இருந்தது. அந்த வகையில் ஜவான் படமும் விஜயகாந்த் படத்தின் காப்பி என்று கூறப்பட்ட நிலையில் ப்ளூ சட்டை மாறன் அதை மரண கலாய் கலாய்த்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Also read: அட்லியால் முடியாததை சாதித்த வெங்கட் பிரபு.. தளபதி 68-ல் இணையும் நடிப்பு அரக்கி

Trending News