திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தளபதி-68 ல் ஜோதிகா வாய்ப்பை தட்டி பறித்த ஆன்ட்டி நடிகை.. ஓவர் அல்சாட்டியும் பண்ணதால் வந்த விளைவு

Thalapathy 68: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் ஆரவாரமாக வெடிக்க போகிறது. இது சம்பந்தமாக ஆடியோ லான்ச் வேலைகள் பிரம்மாண்டமாக நடத்துவதற்கு படக்குழுவில் உள்ளவர்கள் மும்மரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

மேலும் இப்படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி கொடுத்து, வசூல் அளவில் சாதனை படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனை தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்கப் போகிறார். அதற்கான வேலைகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

Also read: ரஜினி, விஜய் ரசிகர்களை குதூகல படுத்திய ஷாருக்கான்.. ஜவான் மேடையை தெறிக்க விட்ட சூப்பர் ஸ்டார்

இப்படத்தில் விஜய்யை இளமையாக காட்ட நவீன டெக்னாலஜியை பயன்படுத்துவதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு வேலைகளும் மெதுமெதுவாக தொடங்கிய நிலையில், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட்டாய் இருந்த ஜோதிகா தற்போது இதிலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஜோதிகா எப்போதும் போல் நாம் தான் பெரிய நடிகை என்று மனதில் ஓவர் நினைப்புடன் சுற்றி இருக்கிறார். அதற்கேற்ற மாதிரி நமக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று அல்சாட்டியம் பண்ணியிருக்கிறார். இதனால் தான் சந்திரமுகி 2 படத்தையும் மிஸ் பண்ணினார், தற்போது தளபதி 68 படத்தையும் மிஸ் பண்ணி விட்டார்.

Also read: நெல்சனை ஃபாலோ பண்ணும் அட்லீ.. விஜய்யால் அதிர்ந்த ஜவான் மேடை

இதற்கிடையில் சைடு கேப்பில் புகுந்து இவருக்கு கிடைத்த வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டார் தற்போது ஆன்ட்டி நடிகை. அவர் வேறு யாரும் இல்லை ரீ என்ட்ரி மூலம் விக்ரம், மாதவன் மற்றும் ரஜினியுடன் நடித்த சிம்ரன் தான். இவர் தான் தற்போது தளபதி 68 படத்தில் நடிக்கப் போவதாக தகவல் கசிந்து வருகிறது.

ஏற்கனவே விஜய், சிம்ரன் காம்போ தூள் கலக்கும் வகையில் ரசிகர்களை குதூகல படுத்திருக்கிறது. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து மறுபடியும் இவர்கள் இணையப் போகிறார்கள் என்றால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும். அத்துடன் இவர்கள் ஒன்றாக நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தளபதி 68 படத்துக்கு வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகிவிட்டது.

Also read: எட்ட முடியாத உயரத்தில் ரஜினி, விஜய்க்கு போட்டி அந்த நடிகர் தான்.. வெளிப்படையாக பேசிய பிரபலம்

Trending News