திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினிக்கு அலர்ஜியான 5 விஷயங்கள்.. எல்லாத்துக்கும் முடிவு கட்டி ஓட விட்ட சூப்பர் ஸ்டார்

Actor Rajini Alergic 5 Things: ரஜினி, இவருடைய 72 ஆவது வயதிலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஸ்டைலாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரே ஹீரோ இவர் மட்டும்தான். இவருக்கு முன்னதாக எத்தனையோ நடிகர்கள் முன்னணியில் வந்திருந்தாலும் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்களால் ஹீரோவாக நடிக்க முடியவில்லை.

ஆனால் இதையெல்லாம் மாற்றும் விதமாக ரஜினி நடித்து வருவது சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். அப்படிப்பட்ட இவர் வளர்ந்து வந்த காலங்களில் சில விஷயங்களை கண்டு கூச்சப்பட்டு இருந்திருக்கிறார். அது என்னென்ன விஷயங்கள் என்று தற்போது பார்க்கலாம். அதாவது ரஜினிக்கு மீடியாவை பார்த்தாலே என்ன பேசணும் என்று தெரியாத நிலையில் முக்கால்வாசி பத்திரிகையாளர்களை நிராகரித்திருக்கிறார்.

Also read: ரஜினிக்கு வில்லனாகும் கமல்.. அடுத்த 1000 கோடி வசூலுக்கு லோகேஷ் போடும் புது கணக்கு!

அடுத்ததாக மேடையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன் நின்று பேசுவது என்றால் மிகவும் நடுக்கத்துடனே மனதிற்குள் பதற்றம் ஆகவும், படபடப்பாகவும் இருப்பாராம். அதற்கு காரணம் என்ன பேசணும், எப்படி பேசணும் என்று இவருக்கு தெரியாததால் இதை நினைத்து சிரமப்பட்டு இருக்கிறார்.

அப்படிப்பட்ட இவருடைய பேச்சு தற்போது ரசிகர்கள் பிரமித்து பார்க்கிற அளவிற்கு இருக்கிறது. அதற்கு காரணம் இவருடைய தெளிவான பேச்சும், கொடுக்கிற அறிவுரையும் தான். இன்னும் சொல்லப் போனால் இவருக்கு ஸ்டேஜ்ல ஏறினாலே பயம் வந்துவிடுமாம். கை கால் எல்லாம் நடுங்கி இருந்திருக்கிறதாம்.

Also read:  45 வருடத்திற்கு முன்பே புகழின் உச்சியை தொட்டு பார்த்த ரஜினி.. சூப்பர் ஸ்டாரை கொண்டாடும் தயாரிப்பாளர்கள்

இதனை அடுத்து இவருடைய படங்களில் அனைவரும் ரசித்துப் பார்ப்பது சண்டை காட்சிகள் தான். அப்படிப்பட்ட இந்த காட்சியில் சக நடிகர்களை அடிப்பது போல் காட்சி இருந்தாலே மனதிற்குள் பதற்றத்துடன் கை கால் எல்லாம் உதறுமாம். அடுத்ததாக ரஜினிக்கு போடப்படும் மேக்கப் தான்.

இந்த மேக்கப் போட்டுக் கொண்டு நீண்ட நேரம் இருப்பது இவருக்கு மிகப்பெரிய அலர்ஜியை உண்டாக்குமாம். அதனாலேயே இதை கண்டு பயப்படும் அளவிற்கு எரிச்சல் பட்டிருக்கிறார். இப்படி இவர் ஹீரோவாக வளர்ந்து வந்த காலங்களில் பல அவஸ்தைகளை கடந்து வந்த நிலையில் இப்பொழுது இது அனைத்திற்கும் முடிவு கட்டும் விதமாக எல்லாத்தையும் அடித்து துரத்திருக்கிறார்.

Also read: கமலை ஆதரித்து, ரஜினியை வளரவிடாமல் செய்த பாலிவுட்.. சூழ்ச்சிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

Trending News