Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இத்தொடரில் இப்போது யாரும் எதிர்பார்க்காத விஷயமாக செழியனின் நடவடிக்கை மாறி உள்ளது. தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் ஓவர் நெருக்கமாக இப்போது செழியன் பழகி வருவது ஆச்சரியம் அளிக்கும் விஷமாக இருக்கிறது.
ஏனென்றால் கோபி ஆரம்பத்தில் ராதிகாவை காதலித்து இருந்தார். ஆனால் அவருடைய தந்தையின் கட்டாயத்தின் பேரில் தான் பாக்கியாவை திருமணம் செய்து கொண்டார். ஆகையால் ஆரம்பத்தில் இருந்தே பாக்கியா மீது வெறுப்பு இருந்தது. அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து ராதிகாவை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
Also Read : சக்களத்தி பெண்ணாக இருந்தாலும் விட்டுக் கொடுக்காத பாக்யா.. மயூக்காக செய்த விஷயம்
ராதிகா தனது கணவரால் துன்பப்படுகிறார் என்று தெரிந்தவுடன் கோபி இறக்கப்பட்டு உதவி செய்ய முயற்சிக்கிறார். அப்போது தான் பழைய காதலை கோபி புதுப்பித்து கொண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் செழியனை பொருத்தவரையில் ஜெனியை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்.
அதுவும் ஜெனி வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடும்பம் மறுப்பு தெரிவித்த நிலையில் அவர்களை சமாதானப்படுத்தி தான் இந்த திருமணத்தை நடத்தினார்கள். அதோடு மட்டுமல்லாமல் இப்போது ஜெனி நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது செழியன் வேறு ஒரு பெண்ணுடன் இப்படி பழகி வருவது மிகவும் தவறான செயல்.
Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஏற்பட்ட சிக்கல்.. விஜய் டிவியின் பாலிடிக்ஸ், ஒத்து ஊதும் இரண்டு பிரபலங்கள்
மேலும் அலுவலகத்தில் வேலை இருப்பதால் இன்று வீட்டுக்கு வர முடியாது என பாக்யாவிடம் செழியன் போன் செய்து கூறினார். ஆனாலும் பாக்யாவுக்கு ஏதோ ஒரு நிரடலாக இருக்க அதன் பிறகு ஜெனி போன் செய்து பேசினார். அப்போதும் செழியன் தனக்கு போன் கூட செய்யவில்லை என்பதை ஜெனி வேதனையுடன் கூறியிருந்தார்.
மறுநாள் செழியன் வீட்டுக்கு வரும்போது எங்க போயிட்டு வர என்ன பாக்கியா அதட்டி கேட்கிறார். உன் முகத்தை பார்த்தாலே சந்தேகமாக இருக்கிறது என்று அடுத்தடுத்த கேள்வியால் செழியனை அலற விடுகிறார். ஆனாலும் தனது சாதுரியத்தால் செழியன் ஏதோ சொல்லி மழுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார்.
Also Read : விஜய் டிவி, சன் டிவி சீரியல் நடிகையை புரட்டி எடுக்க நினைத்த தயாரிப்பாளர்.. பகீர் கிளப்பிய சமீபத்திய பேட்டி