ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சொத்துக்களை மலை போல் குவித்து வைத்திருக்கும் டாப் 5 நடிகைகள்.. எல்லாவற்றிலும் நயன்தாரா முதல் இடத்தை பிடித்திடுவார் போல

Top Five Actress Asset: தற்போதைய காலகட்டத்தின் படி சினிமாவில் ஹீரோகளுக்கு இணையாக நாங்கள் எந்த விதத்திலும் குறைஞ்சவங்க இல்ல என ஒவ்வொரு நடிகையும் நடிப்பால் நிரூபித்துக் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் பெண்கள் சம்பந்தமான படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது. மேலும் எந்த அளவுக்கு நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதை போல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.

அதனால் ஹீரோகளுக்கு இணையாக எங்களுக்கும் சம்பளம் வேண்டும் என்று பல வருடங்களாக குரல் ஒலித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில வருடங்களாக டாப் ஹீரோக்களின் சம்பளத்தின் அளவுக்கு இல்லை என்றாலும், ஹீரோயின்களும் கோடி கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.

Also read: காதலுக்காக மதம் மாறிய 6 நடிகைகள்.. விக்கியின் காதலுக்காக மதம் மாறிய நயன்தாரா

அதன் மூலமாக ஒவ்வொரு நடிகைகளும் அவர்களுடைய சொத்தை மலை போல் குவித்து கொண்டே வருகிறார்கள். அப்படி டாப் 5-வில் இருக்கக்கூடிய நடிகைகளின் சொத்தின் மதிப்புகளை பற்றி பார்க்கலாம். இதில் 5-வது இடத்தில் இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் மூலம் தெலுங்கில் பிசியான ஒரு நடிகையாக மாறிவிட்டார். அப்படிப்பட்ட இவர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததில் இருந்து மிகவும் பிரபலமாய் இருக்கிறார். இவரின் சம்பளம் 2.5 கோடி. இவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 50 கோடி அளவுக்கு இருக்கிறது. அடுத்து 4-வது இடத்தில் சமந்தா, இவரின் சொத்து மதிப்பு 89 கோடி. இவருடைய சம்பளம் ஒரு படத்திற்கு 3 கோடி.

Also read: ஒண்ணுமே தெரியாத புள்ள பூச்சி போல் தமன்னா நடித்த 5 படங்கள்.. ஆனா இப்ப ஐட்டம் நடிகையாக மாறிட்டாங்களே

அடுத்து 3-வது இடத்தில் இருக்கும் நடிகை அனுஷ்கா. இவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 100 கோடி. இவர் ஒரு படத்திற்காக 2 முதல் 3 கோடி வரை சம்பளம் பெறுவார். மேலும் 2-வது இடத்தில் இருப்பது தமன்னா. இவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 110 கோடி. இவர் ஒரு படத்திற்காக 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

இவர்களைவிட முதலிடத்தில் இருப்பது நயன்தாரா. எல்லாவற்றிலும் எனக்கு தான் முதலிடம் என்பதற்கு ஏற்ப அனைத்திலும் கொடி கட்டி பறந்து வருகிறார். அதற்கேற்ற மாதிரி இவருடைய மொத்த சொத்தின் மதிப்பு 165 கோடி. கிட்டத்தட்ட 5 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இப்படி ஒவ்வொரு நடிகையும், நடிகர்களுக்கு இணையாக எல்லா விதத்திலும் இடம் பிடித்து வருகிறார்கள்.

Also read: அனுஷ்கா கிளுகிளுப்பாக ஆடிய 5 ஐட்டம் சாங்ஸ்.. தளபதியை மிரள விட்ட என் உச்சி மண்டையில

Trending News