Thalapathy Vijay – SAC: தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பெரிய போராட்டத்திற்கு பிறகு வெற்றி நாயகனாக மாறியவர். இன்றும் முன்னணி ஹீரோவாக அவர் இருக்கும் பொழுது பல போராட்டங்களையும், சர்ச்சைகளையும் சந்தித்து தான் வருகிறார். விஜய்யின் வெற்றிக்கு ஆரம்ப காலங்களில் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்தது அவருடைய அப்பா மற்றும் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான்.
ஆரம்ப காலங்களில் நிறைய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விஜய்யை ஹீரோவாக ஏற்றுக் கொள்ள யோசித்த பொழுது சந்திரசேகர் களம் இறங்கி அடுத்தடுத்து தன் மகனுக்காக படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்தார். அதேபோன்று விஜய் படங்களுக்கு கதை கேட்பது மற்றும் கால்ஷீட் என அத்தனையும் இவருடைய கைவசம் தான் இருந்தது.
Also Read:மதில் மேல் பூனையாக இருக்கும் விஜய்.. நம்பி அசிங்கப்பட போகும் தளபதி, அடித்து சொல்லும் பிரபலம்
விஜய்யின் வெற்றிக்கு எந்த அளவுக்கு அவருடைய அப்பா உறுதுணையாக இருந்தாரோ அதே அளவுக்கு அவருடைய ஒரு சில சறுக்கல்களுக்கும் அவர் காரணமாக இருந்திருக்கிறார். மேலும் விஜய் முன்னணி ஹீரோவாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரை மேலும் உயர்த்தி காட்டுவதற்காக சந்திரசேகர் செய்த சூழ்ச்சியும் தற்போது வெளியாகி இருக்கிறது.
எஸ் ஏ சி தற்போது தளபதி விஜய்யின் அப்பாவாக ரசிகர்களுக்கு தெரிந்தாலும், அதற்கு முந்தைய காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்த புரட்சி இயக்குனராக இருந்திருக்கிறார். இந்த பெயரை பயன்படுத்தி தான் இவர் பல வளர்ந்து வந்த ஹீரோக்களை அடியோடு அழித்து ஒன்னும் இல்லாமல் செய்திருக்கிறார். இது அத்தனையும் விஜய்யின் வளர்ச்சிக்காக அவர் செய்ததுதான்.
அதாவது தளபதி விஜய் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஏதாவது ஒரு ஹீரோ சூப்பர் ஹிட் படம் கொடுத்து விட்டால், எஸ் ஏ சி உடனே அவர்களை நேரில் சென்று போய் வாழ்ந்து விட்டு வருவாராம். அவர்களும் மிகப்பெரிய இயக்குனர் நம்மை தேடி வந்து பாராட்டுகிறார் என்ற எண்ணத்தில் அவர் சொல்வதை எல்லாம் கேட்பார்களாம். அவரும் அந்த ஹீரோவுக்காக அடுத்து ஒரு படமும் இயக்குவாராம்.
வெற்றி பெற்ற ஹீரோக்களை வைத்து படு தோல்வியான படங்களை இயக்கி அவர்களை சினிமாவை விட்டு ஒதுக்கும் படி செய்து இருக்கிறார். நடிகர்கள் நரேன், ரவி கிருஷ்ணா, ஜெய், நித்தின் சத்தியா போன்றவர்களை எல்லாம் இப்படித்தான் அவர் சோலி முடித்திருக்கிறார். மகனுக்காக இவ்வளவும் செய்தும் தற்போது மகனாலேயே ஒதுக்கப்பட்டு விட்டார் இயக்குனர் எஸ் ஏ சி.