திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பணத்தாசையில் நயன்தாரா எடுத்த விபரீத முடிவு.. ஜவான் ரிலீஸ் நேரத்தில் இப்படி ஒரு சம்பவமா என ஷாக்கான அட்லீ?

Actress Nayanthara: இப்போது எங்கு பார்த்தாலும் ஜவான் படத்தைப் பற்றிய பேச்சு தான் பரவலாக பேசப்பட்டு வருகிறது. செப்டம்பர் 7ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்போதே முன்பதிவு தொடங்கிவிட்டனர். முதல் நாளே சில மணி நேரங்களில் எல்லா டிக்கெட்டுகளும் விற்று முடிந்து விட்டது. பாலிவுட் மட்டுமன்றி எல்லா மொழிகளிலுமே ஜவான் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாருக்கானக்கு தான் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போகவில்லை.

Also Read : ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய ஜவான்.. அட்வான்ஸ் புக்கிங்கில் படைத்த வசூல் சாதனை

ஆனால் அட்லீயின் தயவால் முதல்முறையாக பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் நயன்தாராவுக்கு சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தை பொறுத்து தான் அவரது மார்க்கெட் நிலவரம் தெரியவரும். இந்நிலையில் நயன்தாரா திடீரென புதிய படத்தில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் திரைக்கதையில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடன இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இப்போது லாரன்ஸ் வருஷத்திற்கு நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

Also Read : ஷாருக்கானின் சில்மிஷத்தால் 4 வருடங்களாக இழுத்தடித்த ஜவான் படம்.. அட்லீயை வச்சு செய்த சூப்பர் ஸ்டார்

ஆனாலும் நயன்தாராவுடன் லாரன்ஸ் ஜோடி போடுவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் இப்போது தான் லாரன்ஸ் படிப்படியாக தனது சினிமா கேயரில் வளர்ந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் நயன்தாரா திடீரென இவருடன் ஜோடி போடுவதற்கான காரணம் என்ன என்று பலராலும் கேட்கப்பட்டு வருகிறது.

மார்க்கெட் இல்லை என்பதாலா அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த படத்தில் நடிக்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனாலும் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் நயன்தாரா இவ்வாறு ஒரு விஷயம் செய்திருப்பது அட்லீக்கு கலக்கதை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் ஜவான் படத்திற்கு ஏதாவது நெகட்டிவ் விமர்சனம் வந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளார்.

Also Read : புள்ள மேல கைய வைக்கிறதுக்கு முன்னாடி அப்பன தொடு பார்க்கலாம்.. தாறுமாறான மேக்கிங், ட்ரெண்டாகும் ஜவான் ட்ரைலர்

Trending News