திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

4 கார்களை ஆப்சனாக கொடுத்த கலாநிதி.. இதுதான் ஜாக்பாட் என கூச்சப்படாமல் வாங்கிய நெல்சன்

Nelson: கடந்த ஆகஸ்ட் மாதம் 10 தேதி கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன்  இயக்கி ரஜினிகாந்த்  நடித்து வெளியான திரைப்படம்தான் “ஜெயிலர்”. இதற்கு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பும், நல்ல வரவேற்பும் கிடைத்தது. வெளியான 23 நாளிலேயே இத்திரைப்படத்தின் வசூல் 600 கோடியை தாண்டியது. இன்னும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வளம் வருகின்றன. கூடிய விரைவில் 700 கோடியை தண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலாநிதி மாறன்: இத்திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்தது. இத்திரைப்படம் வெளியாகி தற்போது வரை ரசிகர்களிடையே பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் வெற்றியை குறித்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த்த்திற்கும், இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கு காசோலையாக கொடுத்தார். அது மட்டுமில்லாமல் இருவருக்குமே தனித்தனியாக விலை உயர்ந்த காரை பரிசளித்தார்.

Also Read:ஒன்றரை கோடி காரு போதும், ரஜினி எடுத்த தடாளடி முடிவு.. வாங்கிட்டு நான் பிரச்சனையில சிக்க முடியாது

பென்ஸ்: திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் நோக்கத்தில் தான் இப்படி விலை உயர்ந்த கார்களை கலாநிதி மாறன் பரிசளித்தார். அந்த கார்களை அவர்களையே தேர்வு செய்ய கூறினார். அதில் பென்ஸ் கார் இடம் பெறும். பென்ஸ் காரின் ஆரம்ப விலையே இந்தியாவில் 70 லட்சமாகும், இந்த வகை பென்ஸ் காரில் ஏஎம் ஜிஜிடி 63 எஸ்இ தான் மிகவும் விலை அதிகமானதகும், அது சுமார் 3.30 கோடியாகும்.

லம்போர்கினி: இதில் லம்போர்கினி காரும் இடம் பெறும். இந்த வகை கார் இட்டாலியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வகை லம்போர்கினி காரின் ஆரம்ப விலை இந்தியாவில் சுமார் 3.22 கோடி ஆகும். பிறகு இதில் அதிகபட்ச விலை 4.99 கோடியாக இருக்கின்றன. இவ்வகை கார்கள் வெளிநாடுகளில் இருந்து எக்ஸ்போர்ட் செய்யப்படுகின்றது. இதுபோன்ற விலையுயர்ந்த சொகுசு கார்கள் உலகில் உள்ள பணக்காரர்களால் பயன்படுத்த படுத்துகின்றது.

Also Read:கேரியரை கெடுத்துக்கொண்ட 6 குழந்தை நட்சத்திரங்கள்.. முகம் சுளிக்க வைத்த அஜித் மகள்

போர்ஷே மசான்: போர்ஷே என்னும் இந்த வகை கார்கள் இந்தியாவில் 7 வகைகளில் இருக்கிறது. அதன் ஆரம்ப விலை 88.06 லட்சமாகும். அதிகபட்ச விலை 4.26 கோடி. இந்த கார் ஜெர்மனியில் இருந்து எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது. இதுவும் உலக அளவில் மிகவும் வசதியான கார் வகைகளில் ஒன்றாகும். இயக்குனர் நெல்சன் இந்த வகை காரில் ஒன்றை தேர்ந்தெடுத்தார், அதன் விலை 1 கோடியே 53 லட்சம் ஆகும். நெல்சன் இந்த பரிசினை கூச்சப்படாமல் வாங்கிக் கொண்டார். தற்போது சமூக வலைத்தளங்களின் இந்த அன்பளிப்பினை பற்றி தான் செய்திகள் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.

பிஎம்டபிள்யூ: இந்த வரிசையில் பிஎம்டபிள்யூ காரும் இடம் பெறுகிறது. இந்த காரின் குறைந்தபட்ச ஆரம்ப விலை இந்தியாவில் சுமார் 43.50 லட்சம், இதன் அதிகபட்ச விலை 2.60 கோடியாகும். இதுவும் சொகுசு கார் வகைகளில் எல்லோராலும் அறியக்கூடிய ஒன்றாகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வகை BMW X7 காரை தான் தேர்ந்தெடுத்துள்ளார். அதன் விலை மட்டும் சுமார் 1 கோடியே 64 லட்சம் ஆகும்.

Also Read:பெரும் வயிற்று எரிச்சலில் திரையரங்குகள்.. ஏற்கனவே கல்லா ரொம்பியாச்சு, சன் பிக்சர்ஸ் டீலில் விட்ட பரிதாபம்!

- Advertisement -

Trending News