சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நெத்தி பொட்டில் சுட்டு விளையாடும் ஜெயம் ரவி.. லோகேஷ்க்கு இணையாக தரமான 3 படத்தை கொடுத்த இயக்குனர்

Jayam Ravi: தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி ஒட்டுமொத்த ரசிகர்கள் விரும்பும் தரமான நடிப்பை கொடுத்து மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் ஜெயம் ரவி. இவருடைய படங்களின் வெற்றி, ஏற்ற இறக்கமாக இருந்தாலும் இதுவரை வெற்றி நாயகனாக விடாமுயற்சியுடன் போராடிக் கொண்டு வருகிறார்.

அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இறைவன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

Also read: சித்தார்த் அபிமன்யு-க்கு நிகர் இவர் தான்.. ஜெயம் ரவியோடு மோத போகும் ஸ்டைலிஷ் வில்லன்

இதை பார்க்கும் பொழுது சைக்கோ தனமான மிருகங்களை வேட்டையாடும் துடிப்புடன் இருக்கும் போலீஸ் கேரக்டரில் இவருடைய நடிப்பை மிரள விட்டிருக்கிறார். இப்படத்தில் தவறுகள் செய்யும் கிரிமினல்களை தப்பிக்க விட்டு, இவருடைய பாணியில் நெத்தி பொட்டில் சுட்டு விளையாடிக் கொண்டு அவர்களை கொலை செய்கிறார்.

ஜெயம் ரவிக்கு இப்படம் மிகத் தரமான வெற்றியை கொடுக்கப் போகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.  இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் அகமது. இதற்கு முன்னதாக இவர் வாமண்ணன், மனிதன், என்றென்றும் புன்னகை போன்ற மூன்று படங்களை எடுத்திருக்கிறார்.

Also read: வந்த ஸ்பீடுக்கு அதல பாதாளத்திற்கு செல்லும் ஜெயம் ரவி.. பணத்தாசையால் பறிபோக இருக்கும் மார்க்கெட்

ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைகளுடன் வெற்றியடைந்திருக்கிறது. இதனால் லோகேஷ்க்கு இணையாக இவருடைய வெற்றியை பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து இவருடைய படைப்பு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் வெற்றியை நோக்கி பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஜெயம் ரவியை வைத்து எடுக்கப்பட்டுள்ள இறைவன் படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது.  இதனை அடுத்து இவருடைய வெற்றி படமான தனி ஒருவன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது.

Also read: மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பரத்.. ஜெயம் ரவியால் கேரியர் போச்சு என புலம்பல்

Trending News