வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ரஜினியை விட அதிகமா சம்பளம் வாங்கிய ஒரே நடிகர்.. கடன்ல இருந்தும் சூப்பர் ஸ்டார் கூட நடிக்க மறுத்த சம்பவம்

Actor Rajini: எந்த அளவுக்கு ரஜினிக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதற்கு இணையாக சினிமா பிரபலங்களும் இவரை தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு ரஜினியின் நடிப்பு பலரையும் வியப்பட வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட இவருடன் ஒரு நடிகர் நடிப்பதற்கு மறுத்திருக்கிறார். இன்னும் சொல்ல போனால் அந்த நேரத்தில் பெரும் கடனாளியாக இருந்திருக்கிறார்.

அந்த நிலைமையிலும் கூட இவர் சொன்ன விஷயம் ரஜினியை விட ஒரு காலத்தில் அதிகமாக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் நான். அப்படி இருக்கும் பொழுது நான் அவருடைய படங்களில் நடிப்பதா என மறுத்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை முரட்டு நடிகராக பார்க்கப்பட்டு வரும் ராஜ்கிரண் தான்.

Also read: ராஜ்கிரண் காலில் விழுந்து கதறும் கார்த்தி.. சூட்டிங் ஸ்பாட்டில் வேஷ்டி பாய் செய்யும் அக்கப்போரு

அதாவது ஆரம்பத்தில் பங்கு விநியோகஸ்தராக இருந்தவர். அந்த சமயத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து அவருடைய படத்தை வாங்கி விற்று அதன் மூலம் லாபத்தை அடைந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் நடிப்பின் மீது ஆசை வந்துவிட்டது. அந்த வகையில் இவர் நடித்த இரண்டு மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றியை பார்த்து விட்டது. அப்பொழுது இவருடைய சம்பளம் ஒரு கோடியாக இருந்திருக்கிறது.

இதனை அடுத்து இவர் நடித்த மாணிக்கம் மற்றும் பாசமுள்ள பாண்டியரே படங்கள் மிக மோசமான தோல்வியை அடைந்திருக்கிறது. இந்த தோல்வியை தொடர்ந்து இவர் நடித்த பொண்ணு விளைகிற பூமி படத்திற்கு சம்பளம் ஒரு கோடி 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு காரணம் 1997 ஆம் ஆண்டு ரஜினி ஒரு கோடி சம்பளத்தை வாங்கி இருக்கிறார்.

Also read: ஒரே மாதத்தில் ரிலீசான 4 படங்கள்.. ராஜ்கிரண் உடன் மல்லுக்கட்ட முடியாமல் தோற்றுப் போன ரஜினி

அதனால் இவரை விட கொஞ்சம் அதிக சம்பளம் இருக்க வேண்டும் என்பதற்காக 10 லட்ச ரூபாய் கூடுதலாக வேண்டுமென்று கேட்டு வாங்கி இருக்கிறார். ஏனென்றால் அப்படி வாங்கினால் தான் அனைவரது கவனமும் இவர் மீது திரும்பும் என்ற ஒரு நப்பாசையில் இந்த மாதிரி நடந்திருக்கிறார். அதன் பின் கொஞ்சம் வருடங்கள் கழித்து ராஜ்கிரண் ஒரேடியாக கடனாளியாக போய்விட்டார்.

கிட்டத்தட்ட மூன்றரை கோடி கடனில் தத்தளித்து இருக்கிறார். அந்த சமயத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் சுமன் கேரக்டருக்கு இயக்குனர் சங்கர் இவரைத்தான் முதலில் கேட்டிருக்கிறார். அதற்கு சம்பளமாக ஒன்றரை கோடி தருகிறேன் என கூப்பிட்டு இருக்கிறார். அப்பொழுது எனக்கு இந்த கதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று கடனாளியாக இருந்த பொழுதும் வந்த வாய்ப்பை மறுத்திருக்கிறார் ராஜ்கிரண்.

Also read: அண்ணன் தங்கை சென்டிமென்டை கொண்டாடிய 5 படங்கள்.. நடிப்பில் பாசத்தை தூக்கி சுமந்த ராஜ்கிரண்

Trending News