மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய ஷாருக்கான்.. ரெட் ஜெயண்டால் அட்லீ கூட்டணிக்கு விழப் போகும் மரண அடி

Jawan Movie: ஷாருக்கான் தனது ரெட் சில்லி நிறுவனத்தின் மூலம் ஜவான் படத்தை தயாரித்து, நடித்திருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கோலிவுட் நட்சத்திரங்களான நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி டிக்கெட் விற்பனை தொடங்கியது. அதுவும் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் எல்லா டிக்கெட்டுகளும் விற்ற முடிந்து விட்டது. ஆகையால் ஜவான் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக கருதி வந்த நிலையில் இப்போது இந்த படத்தை பாய்காட் செய்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் ரெட் ஜெயண்ட் நிறுவனர் உதயநிதி தான். அதாவது ஜவான் படத்தை தமிழ் சினிமாவில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் விநியோகம் செய்கிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார். இது அங்குள்ள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் உதயநிதிக்கு எதிராக பாலிவுட் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இதன் வெளிப்பாடாக தான் ஜவான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அங்கு உள்ள பெரிய நடிகர்களின் படங்களை பாய்காட் செய்து வருகிறார்கள்.

ஆனால் கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருந்தது. அந்தப் படத்தின் வசூலை ஜவான் முறியடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது புதிய பிரச்சினையை சந்தித்திருக்கிறது. இதனால் ஜவான் வசூல் பெரிதும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.

மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல் இப்போது ஷாருக்கான் தமிழ் சினிமாவில் ரெட் ஜெயண்ட் வெளியிட்டால் அதிக வசூல் செய்யும் என்று அந்த நிறுவனத்திற்கு படத்தை கொடுத்திருந்தார். அதுவே ஜவான் படத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளதால் அட்லீ கூட்டணி வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.