அட்லியை நம்பி இறங்கிய ஷாருக்கான் தல தப்பினாரா.? ஜவான் முதல் நாள் மொத்த வசூல் ரிப்போர்ட்

Jawan First Day Collection Report: தன்னுடைய முதல் பாலிவுட் அறிமுகத்திற்கான பிள்ளையார் சுழியை அட்லி ஷாருக்கானை வைத்து அமோகமாக ஆரம்பித்திருக்கிறார். நேற்று இவர்களின் கூட்டணியில் வெளிவந்த ஜவான் ஹிந்தியில் ஆஹா ஓஹோ என்று புகழப்பட்டாலும் தமிழைப் பொறுத்தவரை கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வருகிறது.

அனிருத் இசையில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தது இப்படத்திற்கு ஒரு பலமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஜவான் பூர்த்தி செய்ததா என்று கேட்டால் அது நிச்சயம் கேள்விக்குறி தான்.

ஏனென்றால் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் அது எந்தெந்த படங்களின் காப்பி என்று லிஸ்ட் போட தொடங்கிவிட்டனர். இது எதிர்பார்த்தது தான் என்றாலும் பாலிவுட் போயும் அட்லி திருந்தவில்லையா என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

இருந்தாலும் இந்த வயதிலும் ஷாருக்கான் பல கெட்டப் போட்டு மாஸ் காட்டியது ரசிக்கும் படியாக தான் இருந்தது. அதனாலேயே தற்போது அவருடைய ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் படத்தில் இருக்கும் பிரம்மாண்டம் தான்.

அந்த வகையில் தற்போது ஜவான் முதல் நாளிலேயே இந்திய அளவில் 72.46 கோடி வரை வசூலித்திருக்கிறது. அதில் ஹிந்தியில் மட்டுமே இப்படத்திற்கு 60.76 கோடி கலெக்சன் கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து தமிழில் 6.41 கோடியும், தெலுங்கில் 5.29 கோடியும் வசூலித்திருக்கிறது.

இப்படி இந்தியாவில் அதிக லாபம் பார்த்துள்ள ஜவான் உலக அளவில் 140 கோடி வரை வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இது அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்தால் மட்டுமே தயாரிப்பாளரான ஷாருக்கான் தல தப்ப முடியும் என்ற சூழல் இப்போது எழுந்துள்ளது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →