Vijay Tv Bigg Boss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அனைத்து நிகழ்ச்சிகளுமே மக்களிடம் பிரபலமாகி அவர்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறது. அந்த வகையில் எப்போதுமே ரியாலிட்டி ஷோ என்றால் விஜய் டிவி தான் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி கொடி கட்டி பறந்து வருகிறது.
அதனால் அடுத்த மாதத்தில் பிக் பாஸ் சீசன் 7 துவங்க இருக்கிறது. இதில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகளை காட்டி புரியாத புதிரை வைத்து பார்க்கும் ஆர்வத்தை கூட்டி வருகிறார்கள். மேலும் இதில் பங்கு பெறுவதற்கு 18 போட்டியாளர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். அதில் ஒரு நடிகை குக் வித் கோமாளியில் பங்கேற்றார்.
ஆனால் அதில் அவரால் கடைசி வரை பயணிக்க முடியாமல் பாதியிலேயே போய்விட்டார். அத்துடன் விஜய் டிவி புகழும் அவரிடம் கொஞ்சம் ஜொல்லு விட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து சில பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்தது. மேலும் கவர்ச்சி நடிகையாகவும் அவருடைய பயணத்தை தொடங்கி நடித்தார்.
அந்த வகையில் தற்போது மீண்டும் விஜய் டிவி இவரை குத்தகை எடுத்து பிக் பாஸிற்குள் அனுப்ப இருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லை ருத்ரதாண்டவம் படத்தில் நடித்த தர்ஷா குப்தா தான். எப்படியாவது குக் வித் கோமாளியில் விட்டதை பிக் பாஸில் பிடித்து விட வேண்டும் என்று தீர்மானத்துடன் இருக்கிறார்.
இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்து வந்திருக்கிறார். அதன் பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காலடி வைத்த பிறகுதான் வெள்ளித்திரையில் இவருடைய முகம் பிரபலமானது. அந்த வகையில் தற்போது பிக் பாஸிற்கும் வரை இருக்கிறார்.
இதற்கு அடுத்து இவருடைய ரேஞ்ச் என்ன ஆகப்போகிறது என்பது இவர் கையில் தான் இருக்கிறது. எப்படியாவது தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இவரை தயார்படுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அங்கே போய் என்ன பண்ணப் போகிறார் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.