வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இன்ஸ்டாவில் குழந்தைகளுடன் என்டரி கொடுத்த நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம்

Actress Nayanthara: கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நயன்தாரா முதன் முதலாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உடன் ஜோடி சேர்ந்து ஜவான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் வருகிற 7ம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை பொறுத்து நயன்தாராவின் மார்க்கெட் கூடுமா அல்லது இனி இதோடு அவ்வளவுதானா என்று தீர்மானிக்கக் கூடிய படமாக ஜவான் படம் இருக்கப் போகிறது.

அதற்கு காரணம் பழைய மாதிரி நயன்தாராவின் மவுசு குறைந்துவிட்டது. அதனால் பட வாய்ப்புகளும் இவரை தேடி போவதில்லை. கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருந்தால் இவரால் சினிமாவில் நிலைத்திருக்க முடியும். அத்துடன் இவருடைய திருமண வாழ்க்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

Also read: விக்னேஷ் சிவனே பொறாமையில் பொங்கும் படி நயன்தாராவை கொஞ்சிய ஷாருக்கான்.. 5 பேருக்கு கிடைத்த செல்ல பெயர்

கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு அம்மாவாகி இருக்கிறார். எந்த அளவிற்கு நடிகையாக நடிப்பில் சிறந்து விளங்கினாரோ, அதேபோல் தற்போது பொறுப்பான அம்மாவாகவும் குழந்தையுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்து வந்தார்கள்.

மேலும் இது நாள் வரை முன்னணி ஹீரோயினாக இருந்த பொழுது சமூக வலைதளங்களில் எந்தவித அக்கவுண்டும் இல்லாமல் இருந்தார். ஆனால் நேற்று இன்ஸ்டாகிராமில் புதிதாக இவர் அக்கவுண்டை தொடங்கி விட்டார். அதுவும் இவருடைய வளர்ச்சிக்காக தான் இந்த மாதிரி செய்திருக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி வருகிறது.

Also read: சென்சாருக்கு தயாரான ஜவான், கடுப்பில் நயன்தாரா.. லேடி சூப்பர் ஸ்டாரை நம்ப வச்சு கழுத்தறுத்த அட்லி

அதாவது இவருடைய மார்க்கெட் குறைந்து கொண்டே போவதால் சமூக வலைதளங்களில் இவருக்கான விஷயங்களை போஸ்ட் பண்ணி அதன் மூலம் வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார். அத்துடன் அக்கவுண்ட் ஓபன் பண்ண நாளிலேயே தனது மகன்களையும் முதன்முதலாக அறிமுகப்படுத்தி விட்டார்.

அதாவது நயன்தாரா கையில் இரண்டு குழந்தைகளை தூக்கி வைத்து, ஸ்டைலிஷ் கண்ணாடியை போட்டுக் கொண்டு ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த குழந்தையை பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்கிறது என்று அனைவரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

நயன்தாரா குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம்

nayanthara babies
nayanthara babies

Also read: விக்னேஷ் சிவனுக்கு உச்சகட்ட பயத்தை காட்டி கவர்ச்சி ஆட்டம் போட்ட நயன்தாரா.. வீடியோ பார்த்தாலே பக்குனு இருக்கு

Trending News