திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த 6 சினிமா பிரபலங்களுக்கு இடையே இப்படி ஒரு உறவா.? அருண் விஜய்க்கு தம்பி முறையாகவும் சஞ்சீவ்

Arun Vijay – Sanjeev : பாலிவுட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் படங்களில் நடிப்பது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் தமிழ் சினிமாவை பொருத்தவரைக்கும் உறவுக்காரர்களாகவே இருந்தாலும் அதை வெளியில் சொல்லாமல் இருக்கும் நடிகர்கள் தான் அதிகம். அப்படி இந்த ஆறு பிரபலங்களும் முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கு ரொம்ப நெருங்கிய உறவுக்காரர்களாக இருக்கிறார்கள்.

டேனியல் பாலாஜி: தமிழில் வேட்டையாடு விளையாடு படத்தின் மூலம் பிரபலமானவர் தான் டேனியல் பாலாஜி. சித்தி தொடரில் டானியல் என்னும் கேரக்டரில் நடித்ததன் மூலம் இவர் பெயர் டேனியல் பாலாஜி என மாறியது. பிரபல நடிகர் முரளியின் தந்தை இவருக்கு மாமா முறையாகும். இருந்தாலும் முரளியும், டேனியல் பாலாஜியும் நெருங்கிய உறவினர்கள் என்று வெளியில் சொல்லிக் கொண்டதில்லை. முரளியின் மகன் அதர்வாவுக்கு டேனியல் மாமா முறை ஆவார்.

Also Read:ரத்தமும் சதையுமாக ஒட்டி வரும் விஜய், அட்லீ.. இவங்க அலப்பறை கொஞ்சம் ஓவராக தான் போகுது போல

ஹரிபிரசாத்: சென்னை 28 படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹரி பிரசாத், தளபதி விஜயின் சொந்த மாமா மகன் ஆவார். இவர் உன்னை நினைத்து படத்தில் லைலாவுக்கு தம்பியாக நடித்திருப்பார். அதேபோன்று பிரண்ட்ஸ் திரைப்படத்திலும் சூர்யாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

வித்யா பாலன்: பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் வித்யா பாலன். தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆன பிரியாமணி இவருக்கு சொந்த மாமா மகள் ஆவார். ஆனால் இவர்கள் இருவருமே இந்த உறவு முறையை எந்த ஒரு பொது வெளியிலும் வெளிகாட்டிக் கொண்டது இல்லை. பலருக்கும் இவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூட தெரியாது.

யுகேந்திரன்: அஜித் குமாரின் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தவர்தான் யுகேந்திரன். இவர் யூத் படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். யுகேந்திரன் நடிப்பதோடு மட்டுமில்லாமல், சினிமாவில் நிறைய பாடல்களும் பாடியிருக்கிறார். தமிழ் சினிமாவின் முக்கிய பின்னணிப் பாடகர் ஆன மலேசியா வாசுதேவனின் மகன் தான் இந்த யுகேந்திரன்.

Also Read:விஜய் தேவரகொண்டா-சமந்தா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதா.? குஷி எப்படி இருக்கு, அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

சத்யன்: நடிகர் சத்யன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, பின்னர் காமெடியன் ஆனவர். இவருடைய நடிப்பில் நண்பன், தேவதையை கண்டேன், ரௌத்திரம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் எளிமையான நகைச்சுவை மற்றும் தனக்கே உரிய கோயம்புத்தூர் வட்டார பேச்சின் மூலம் கவர்ந்திழுக்கும் இவர், நடிகர் சத்யராஜின் சொந்த அண்ணன் மகன் ஆவார்.

சஞ்சய்: சின்னத்திரையில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சஞ்ஜீவ். இவர் தளபதி விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதையும் தாண்டி இவர் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் தங்கை மகன் ஆவார். நடிகர் அருண் விஜய்க்கு தம்பி முறையாவார். இவருடைய அக்கா சிந்துவும் தமிழில் நிறைய படங்களிலும், சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

Also Read:சமந்தாவை விடாமல் துரத்தும் அந்தப் பிரச்சனை.. மேடையிலேயே உருகிய விஜய் தேவரகொண்டா!

Trending News