Yogi Babu – Lucky Man Movie: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதான் படங்கள் பொதுவாக ரிலீஸ் ஆவது உண்டு. அப்படி இந்த வாரம் வெள்ளிக்கிழமையான இன்று மொத்தம் ஆறு படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் யோகி பாபு மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கும் படமும் ஒன்று. இந்த ஆறு படங்களில் எது தேரும் என அடுத்த இரண்டு நாள் கலெக்ஷனில் தெரிந்துவிடும்.
கிக்: இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சந்தானம் மற்றும் தன்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கிக். சந்தானத்திற்கு டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. கிக் படம் வெற்றி தருமா அல்லது சந்தானத்தின் பழைய படங்கள் போலவே மொத்தமாய் சொதப்பி இருக்கிறதா என இன்று வெளிவரும் விமர்சனங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
பரம்பொருள்: போர் தொழில் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சரத்குமார் நடித்து ரிலீசாகி இருக்கும் படம் தான் பரம்பொருள். இந்த படத்தில் சரத்குமார் பேராசை பிடித்த போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சிலை கடத்தல் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.
துடிக்கும் கரங்கள்: இயக்குனர் வேலுதாஸ் இயக்கத்தில் விமல் மற்றும் சுரேஷ் மேனன் இணைந்து நடித்திருக்கும் படம் துடிக்கும் கரங்கள். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக மனிஷா நடித்திருக்கிறார். விமல் முழுக்க முழுக்க ஆக்சன் ஹீரோவாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு மாஸ் மசாலா படமாக உருவாகி இருக்கிறது.
லக்கி மேன்: இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் லக்கி மேன். வறுமையால் வாடும் யோகி பாபு தன்னை ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவராக நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, அவருக்கு பரிசாக ஒரு கார் கிடைக்கிறது, அதன் பின்னால் அவர் வாழ்க்கையில் நடக்கும் நல்ல விஷயங்களும், அதை தொடர்ந்து நடக்கும் பிரச்சனையையும் மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
Also Read:முன்னாள் கணவனை நினைத்து கண்கலங்கிய சமந்தா… குஷி பட ப்ரோமோஷனில் நடந்த சம்பவம்
கருமேகங்கள் கலைகின்றன : அழகி, பள்ளிக்கூடம் போன்ற எதார்த்தமான படங்களை கொடுத்த இயக்குனர் தங்கர்பச்சான் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். தலைமுறை வித்தியாசம் உள்ள இருவர் தொலைந்து போன உறவுகளை பற்றி பகிர்ந்து கொள்ளும் கதைக்களமாக இந்த படம் இருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா மற்றும் யோகி பாபு நடித்திருக்கிறார்கள்.
ரங்கோலி : இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் படம் ரங்கோலி. முழுக்க முழுக்க பள்ளி வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு ஏற்படும் பிரச்சனை, அதனால் அவருடைய குடும்பத்தை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் என இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார்.