புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

முதல் நாள் முதல் காட்சியை பார்த்து அலப்பறை செய்த விஜய்.. வைரலாகிப் பரவும் புகைப்படம்

Actor Vijay: வசூல் மன்னனாகவும், ஆட்ட நாயகனாகவும் திரை உலகில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவருடைய படங்கள் திரையரங்குகளில் வந்தால் இவரின் ரசிகர்களுக்கு அதுதான் மிகப்பெரிய விருந்து என்று திருவிழா மாதிரி கொண்டாடி வருவார்கள். அத்துடன் விஜய்யின் படத்தை முதல் நாள் முதல் ஷோவாக பார்க்க வேண்டும் என்று வெறித்தனமான ரசிகர்கள் அலைமோதிக்கொண்டு போவார்கள்.

தற்போது இவருடைய ரசிகர்கள் செய்யும் அலப்பறை போலவே விஜய்யும் அமெரிக்காவில் வெறித்தனமாக ஒரு படத்தை ரசித்துப் பார்த்திருக்கிறார். அதுவும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ஆக வேண்டும் என்று திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அலப்பறை கூட்டும் அளவிற்கு ரசிகராக என்ஜாய் பண்ணி இருக்கிறார்.

Also read: ஆடியோ லான்ச் வேண்டவே வேண்டாம்.. நியாயமாய் விஜய் கூறும் 5 விஷயங்களால் லோகேஷ்க்கு செக்

அதாவது தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இப்படத்தில் விஜய்யை இளமையாக காட்டுவதற்காக லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்துவதற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் இடத்திற்கு போயிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இவருடன் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் போயிருக்கிறார்கள்.

அங்கே போன இடத்தில் இவர்களுக்கு ஏற்ற மாதிரி வேலை வெற்றிகரமாக முடிந்து விட்டது. இந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிரபல நடிகர் நடித்த “The Equalizer 3” திரைப்படத்தை பார்ப்பதற்கு சென்று இருக்கிறார்.

Also read: ரகசிய சந்திப்பால் கோபத்தில் சூர்யா.. விஜய் மேனேஜர் ஜெகதீஷ் செய்யும் அழிச்சாட்டியம்

அங்கு படத்தை பார்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த நடிகர் திரையில் தோன்றியதும் வா தலைவா என்று இரு கைகளை விரித்து உண்மையான ரசிகர் போல் தியேட்டரில் உற்சாகத்துடன் சந்தோசத்தை தெறிக்க விட்டிருக்கிறார். இப்படி இவர் தியேட்டரில் செய்த அலப்பறையை தயாரிப்பாளர் புகைப்படமாக எடுத்து இவருடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படம் தான் வைரலாகி பரவுகின்றது. அத்துடன் இவருடைய ரசிகர்களும் விஜய்க்குள் இப்படி ஒரு வெறித்தனமான ரசிகர் இருக்கிறார் என்று ஆச்சரியத்தில் பார்த்து வைரலாக்கிக் கொண்டு வருகிறார்கள்.

முதல் நாள் முதல் காட்சியை பார்த்த அலப்பறை செய்த விஜய்

Vijay (1)
Vijay (1)

Also read: பத்தி எறிய போகும் பிக் பாஸ் வீடு.. டிஆர்பிக்காக முரட்டு வில்லனை தூக்கிய விஜய் டிவி

Trending News