ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

2024இல் உலகளவில் எதிர்பார்க்கப்படும் 5 பான் இந்தியா படங்கள்.. நாலு டைனோசர்களுடன் மோதும் சிவகார்த்திகேயன்

Upcoming Pan India Movies: 2024 இல் ரிலீஸ் ஆக வெய்டிங்கில் இருக்கும் 5 பான் இந்தியா திரைப்படங்கள், திரையரங்குகளை அதிர வைக்க காத்துக் கொண்டிருக்கிறது. சரவெடி என்டர்டைன்மென்ட் படமாக அமையும் என கருத்துக்கணிப்பு சொல்கிறது. இதில் எதுவும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்லைனு சொல்லுவது போல, படங்கலுக்குள் போட்டிகள் இருக்கலாம் என எதிர்பார்ப்புகள் இருக்கிறது.எந்த படம் தூள் கிளப்பபோகுதுனு பொறுத்திருந்து பார்க்கலாம்.

கங்குவா: அண்ணாத்தே படத்தின் இயக்குனரான சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் கங்குவா. இதில் ரோலக்ஸ் சூர்யாவும், திஷா பதானி இணைந்து நடிக்கிறர்கள். இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை திரைப்படம் ஆகும். இது தமிழர்களின் வரலாற்றையும் குறிப்பாக கொண்டு, ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்டது. சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்திற்கு ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது பத்து மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. கண்டிப்பாக திரைப்படம் வசூலை அள்ளிக் குவிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

Also Read: இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பாலோ செய்யும் ஒரே பிரபலம்.. காசு மோகத்தால் நம்ம ஆட்களை மதிக்காத அம்மணி

இந்தியன் 2: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2. இது 1996 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்தியன் படத்தின் தொடர்ச்சியான பாகம் ஆகும். திரைப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் போன்றோர் நடித்திருக்கின்றனர். ராணுவ வீரர் ஊழலுக்கு எதிராகவும், குற்றங்களுக்கு எதிராகவும் போராடும் வகையில் கதைக்களம் அமைந்திருக்கும். சிலம்பரசன், துல்கர் சல்மான், ஆர்யா அவர்களும் நடிக்க உள்ளனர். மக்களிடையே விழிப்புணர்வு தூண்டும் அதிரடி திரைப்படமாக அமைந்துள்ளது என தகவல்.

அயலான்: திரை உலகின் மாபெரும் ஜாம்பவான்களின் படங்களுக்கு போட்டியாக நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் போட்டியாக களமிறங்குகிறது. இது அறிவியல் சார்ந்த கற்பனை கலந்த காமெடி திரைப்படம் ஆகும். இதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாகவும், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார். இதில் ஏலியன்கள் பற்றியும் இருப்பதால் இன்னும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது, பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: நடிகைகளுக்கு ஓகே ஆனாலும் லிப் லாக் வேண்டாம் என மறுக்கும் 6 உத்தம நடிகர்கள்.. த்ரிஷாவுக்கு முத்தம் கொடுக்க மறுத்த ஹீரோ

புஷ்பா 2: 2021 ஆம் ஆண்டு ரிலீசான புஷ்பா படத்தின் தொடர்ச்சியை இந்த புஷ்பா 2 திரைப்படம் ஆகும். அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் 2ஆம் பாகத்திற்கு எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக உள்ளது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா போன்றவர்கள் நடித்துள்ளனர். இது சுமார் 500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு உலகளவில் நிறைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இது ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும்.

ப்ராஜெக்ட் k: பாகுபலி பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD என்ற திரைப்படமும் வெயிட்டிங்கில் இருக்கிறது. இது ஒரு அறிவியல் கற்பனை சார்ந்த திரைப்படமாக இருக்கும். இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே என முன்னணி பிரபலங்கள் அனைவரும் நடித்துள்ளனர். இது மெகா சூப்பர் ஹிட் திரைப்படமாக வலம் வரும் என எதிர்பார்ப்புகள் ஏராளமாக உள்ளது. இதுவும் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், இங்கிலீஷ் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

Also Read:நா மட்டுமா.? அந்த ரெண்டு நடிகைகளையும் புரட்டி எடுத்த சீமான்.. கொஞ்சநெஞ்ச மானத்தையும் வாங்கிய விஜயலக்ஷ்மி

Trending News