LEO Movie: லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு இப்போது பயங்கரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாக உள்ள நிலையில் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இதில் தளபதி விஜய் என்ன பேச போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் லியோ படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பாடலில் இப்போது சென்சார் போர்டு கை வைத்துள்ளது. அதாவது ஒரு படம் வெளியாக வேண்டும் என்றால் சென்சார் போர்டுக்கு அனுப்பப்படும்.
Also Read : டிக்கெட் புக்கிங்கில் ஜெயிலர் சாதனையை முறியடித்த லியோ.. அப்போ 1000 கோடி வசூல் உறுதியா.?
அங்கு தணிக்கை சான்றிதழ் வழங்கிய பிறகு தான் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியும். அந்த வகையில் லியோ படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பும் போது நான் ரெடி என்ற பாடலில் இடம்பெற்ற சில வரிகளை மாற்ற உத்தரவிட்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த பாடல் வெளியான போது சர்ச்சை எழுந்தது.
அதில் புகை பிடித்தல் போன்ற காட்சிகளும் இடம் பெற்று இருந்ததால் சமூக ஆர்வலர்கள் இந்தப் பாட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர். இப்போது சென்சார் போர்டில் பத்தவச்சு புகைய விட்டா பவருக்கிக்கு, புகையில புகையில பவருக்கிக்கு, மில்லி உள்ள போனா போதும் கில்லி போன்ற பாடல் வரிகளை மாற்ற உத்தரவிட்டிருக்கின்றனர்.
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்த்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். இப்படி இருக்கும் சூழலில் புகை பிடித்தல், புகையிலை போன்ற விஷயங்கள் லியோ படத்தில் இடம் பெற்றிருப்பது மிகவும் அதிர்ச்சியான விஷயம்தான்.
ஏற்கனவே அர்ஜுனின் அறிமுக வீடியோவை லியோ படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அதில் எக்கச்சக்க வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இவ்வாறு பயங்கரமான விஷயங்கள் லியோ படத்தில் இடம் பெற்று இருந்த நிலையில் இப்போது சென்சார் போர்டு பாடல் வரிகளுக்கு தடை போட்டு இருப்பதால் விஜய் மற்றும் லோகேஷுக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது.
Also Read : மாரிமுத்துவுக்கு இரங்கல் செய்தி சொன்ன ரஜினி, சூர்யா.. சோகத்திலும் வன்மத்தை கக்கிய விஜய்யின் விசுவாசிகள்