MGR: எம்ஜிஆரின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று தான். அவருடைய மறைவு செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. இந்த சூழலில் எம்ஜிஆரின் இறுதி அஞ்சலிக்கு அவருடைய உயிர் நண்பன் வராதது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதற்கான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.
அதாவது சினிமாவில் தான் ஹீரோ, வில்லன் என்று பாகுபாடு பார்த்து காண்பிக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் இவர்கள் தோழமையுடன் தான் பழகி வருகிறார்கள். அவ்வாறு எம்ஜிஆரின் நிறைய படங்களில் அவருக்கு வில்லனாக நடித்த நடிகர் ஒருவர் தான் கடைசி வரை உயிர் நண்பனாக இருந்து வந்திருக்கிறார்.
Also Read : எம்ஜிஆரை எதிர்த்து நின்ற ஒரே நடிகை.. உங்க இஷ்டத்துக்கு நடிக்க முடியாது, சம்பளத்தை திருப்பிக் கொடுத்த அவலம்
அதாவது படங்களில் எம்ஜிஆர் உடன் படு பயங்கரமாக சண்டை இடக்கூடியவர் நம்பியார். ஆனால் நிஜத்தில் எம்ஜிஆர் மற்றும் நம்பியார் போன்ற நண்பர்கள் யாராலும் இருக்கவே முடியாது என்ற அளவுக்கு நட்பு பாராட்டி வந்துள்ளனர். அதனால் தான் படத்தில் இவர்களுக்குள் ஒரு ஒத்துழைப்பு இருந்திருக்கிறது.
ஆனால் எம்ஜிஆரின் இறுதி அஞ்சலியில் நம்பியார் கலந்து கொள்ளவில்லை. அதாவது எம்ஜிஆரின் இறப்பு செய்தி கேட்டு மீள முடியாத துயரில் நம்பியார் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் தான் ஐயப்பன் சாமிக்கு மாலை அணிந்திருந்தார். மேலும் நம்பியார் குரு சாமியாக இருந்ததால் மாலையை கழட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதனால் தன்னுடைய நண்பனின் முகத்தைக் கடைசியாக கூட பார்க்க முடியவில்லை என்ற துயரில் நம்பியார் மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டாராம். அதன் பிறகு எம்ஜிஆர் அரசியல் போன பின்பு தன்னை விட்டு திரையுலகில் இருந்து பிரிந்து விட்டார். இப்போது ஒட்டுமொத்தமாகவே என் வாழ்க்கையை விட்டு முழுவதுமாக பிரிந்து விட்டார் என கதறி அழுதுள்ளார்.
இவ்வாறு எம்ஜிஆரை நினைத்து நம்பியார் அழுத போது ஆறுதல் சொல்ல கூட முடியாமல் சுற்றி உள்ளவர்கள் துக்கம் தொண்டையை அடைக்கும் அளவுக்கு நின்று இருக்கிறார்கள். மேலும் நம்பியார் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்த பிறகு எம்ஜிஆர் வீட்டுக்கு சென்று அவரது புகைப்படம் பக்கத்தில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தாராம்.
Also Read : சிவாஜி, எம்ஜிஆர் உடன் குழந்தை நட்சத்திரமாய் கலக்கிய ஸ்ரீதேவியின் 6 படங்கள்.. மூன்று வயதில் முருகன் அவதாரம்