வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வெட்கத்தை விட்டு தேடி போய் வாய்ப்பு கேட்ட பிரியாமணி.. கடைசிவரை நம்ப வைத்து ஏமாற்றிய விஜய்யின் தம்பி

Actress Priyamani: ரசிகர்களால் முத்தழகு என்று செல்லமாக அழைக்கப்பட்டு வரும் பிரியாமணி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் வெட்கத்தை விட்டு தேடிப்போய் வாய்ப்பு கேட்டும் கடைசிவரை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார் விஜய்யின் தம்பி.

அதாவது அட்லி தமிழில் விஜய்யை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவரை தன்னுடைய நலம் விரும்பியாகவும், அண்ணனாகவும் பார்ப்பதாக பல மேடைகளில் கூறி இருக்கிறார். அதனாலயே ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

Also read: லோகேஷுக்கு அட்லீய விட கம்மியா சம்பளம் கொடுத்து கரெக்ட் செய்த சன் பிக்சர்ஸ்.. காப்பி கதை செய்யும் ஸ்மார்ட் வொர்க்

படம் வெளியாகும் வரை இந்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அப்படி ஒரு விஷயம் மட்டும் நடக்கவே இல்லை. இது அனைவருக்கும் கொஞ்சம் ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. அதேபோன்றுதான் அட்லியை கடைசிவரை நம்பி ஏமாந்து போய்விட்டதாக பிரியாமணி வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜவான் படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போது ஷூட்டிங் சமயத்தில் தமிழுக்காக விஜய்யும், தெலுங்குக்காக அல்லு அர்ஜுனும் கேமியோ ரோலில் நடிக்கிறார்கள் என்று வந்த செய்தியை அவரும் நம்பி இருக்கிறார்.

Also read: அட்லீக்கு மட்டும் கிடைக்கும் மாலை, மரியாதை.. கண்டுகொள்ளாமல் கை கழுவி விடப்பட்ட அஜித் நண்பர்

அதை தொடர்ந்து அட்லியிடம் இது குறித்து கேட்டு இருக்கிறார். அவரும் சிரித்தபடியே இருந்தாராம். உடனே பிரியாமணி வெட்கத்தை விட்டு விஜய் நடிக்கும் போது ஒரு சின்ன சீனாவது எனக்கு கொடுங்கள் என்று வாய்ப்பு கேட்டிருக்கிறார். அதற்கும் அட்லி சிரித்தபடியே அதற்கு என்ன தாராளமா பண்ணிடலாம் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் கடைசிவரை அப்படி ஒரு சம்பவம் மட்டும் நடக்கவே இல்லை. இதனால் எனக்கு அட்லி மீது சரியான கோபம் வந்தது என்று பிரியாமணி கூறியிருக்கிறார். மேலும் இப்படி சிரிச்சு சிரிச்சு ஏமாத்திட்டாரே என்று அவர் இப்போது இந்த விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்து அட்லியை கோர்த்து விட்டு இருக்கிறார்.

Also read: ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

Trending News