Ashok Selvan Marriage Photos: தெகிடி, சூது கவ்வும் போன்ற படங்களில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் அசோக் செல்வன். வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நல்ல கதைகளை அசோக் செல்வன் தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார்.
இந்நிலையில் இன்று பாண்டியன் வீட்டு மருமகனாக மாறி இருக்கிறார் அசோக் செல்வன். அதாவது ஊமை விழிகள், இணைந்த கைகள் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்தான் அருண் பாண்டியன். இவருடைய மகள் கீர்த்தி பாண்டியனும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
அந்த வகையில் அன்பிற்கினியாள் படம் இவருக்கு சிறந்த படமாக அமைந்திருந்தது. இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்தனர். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது.
அருண் பாண்டியனின் 120 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான அசோக் செல்வன்

மேலும் அசோக் செல்வனை அருண் பாண்டியனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் கீர்த்தி பாண்டியன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார். ஆனால் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர்களது திருமணம் திருநெல்வேலியில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் நடைபெற்று இருக்கிறது.
அருண் பாண்டியன் குடும்பம்

மேலும் விரைவில் சென்னையில் ரிசப்ஷன் ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் அதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியனின் அண்ணன் மகளான நடிகை ரம்யா பாண்டியனும் இவர்களது திருமணத்தில் பங்கேற்று உள்ளார். அந்த புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் பங்கேற்ற ரம்யா பாண்டியன்

அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். அருண்பாண்டியன் சினிமாவை தாண்டி நிறைய பிசினஸ் செய்து வருகிறார். அவருக்கு 100 கோடிக்கு மேல் சொத்து உள்ள நிலையில் அதற்கு சொந்தக்காரராக அசோக் செல்வன் அவரது மகளை மணந்திருக்கிறார்.
கீர்த்தி பாண்டியன்
