திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

7வது நாளில் ஆட்டம் காணும் ஜவான் வசூல்.. 1000 கோடியை தொட முடியாத சோகத்தில் பாலிவுட் பாட்ஷா

Jawan Collection: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் ஜவான் படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. முதல் நாளிலேயே 130 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்த இப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் பல சாதனைகளை புரிந்தது.

இதனால் விரைவிலேயே ஷாருக்கான் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்து விடுவார் என்று பாலிவுட் திரையுலகம் பெரிதும் எதிர்பார்த்தது. அதற்கு ஏற்றார் போல் இரண்டாவது நாளில் 110 கோடிகளையும் மூன்றாவது நாளில் 145 கோடிகளையும் ஜவான் வசூலித்திருந்தது.

Also read: காப்பி அடித்தாலும் வசூலில் சோடை போகாத ஜவான்.. 2வது நாள் மொத்த வசூல் ரிப்போர்ட்

அதை அடுத்து 4வது, 5வது நாட்களிலும் இந்த வசூல் ஏறுமுகமாகவே இருந்தது. ஆனால் ஆறாவது நாளான நேற்று இந்த வசூல் 50 கோடி ரூபாயாக குறைந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

அதைத்தொடர்ந்து நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வமான வசூல் 574 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பரவாயில்லையே ஆறு நாளில் 600 கோடியை ஜவான் நெருங்கி விட்டதே என்று பலரும் ஆச்சரியப்பட்ட நிலையில் ஏழாவது நாளான இன்று இதன் கலெக்சன் கொஞ்சம் டல்லடிக்கிறதாம்.

Also read: அட்லி, ஷாருக்கான் கூட்டணி தேறியதா.? ஜவான் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்

இப்படியே போனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்கிறது கருத்து கணிப்புகள். இதனால் ஆயிரம் கோடி கனவில் இருந்த பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கான் தான் இப்போது கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

ஏனென்றால் இதற்கு முன்னதாக அவருடைய பதான் ஆயிரம் கோடியை வசூலித்து இருந்தது. அதனாலேயே அந்த சாதனையை இப்படம் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் ஏழு நாளிலேயே அந்த வசூலை நெருங்க திணறும் ஜவான் இனிவரும் நாட்களில் எந்த அளவுக்கு கலெக்சனை அள்ளும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

Trending News