Thalaivar 171: ஜெயிலர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் சூப்பர் ஸ்டாரை வைத்து மீண்டும் அவருடைய 171 வது படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்த லோகேஷ் ரஜினி கூட்டணி தற்போது உருவாகி இருக்கிறது. இந்த படம் ஜெயிலர் படத்தை விட வசூலை அள்ளி குவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஏற்கனவே நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் ஜெயிலர் படம் எதிர்பாராத மாபெரும் வெற்றியை கொடுத்து இருக்கிறது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றியை வைத்து ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் இன்னும் டபுள் எஃபெர்ட் போட காத்திருக்கிறார். அதிலும் லோகேஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ரஜினிக்கு மிகப்பெரிய ஆசையாகவும் இருந்தது.
ஏற்கனவே ஜெயிலர் வெற்றியை கொண்டாடும் விதமாக சன் பிக்சர்ஸ் பேசிய சம்பளத்துக்கு மேல் ரஜினிக்கு நூறு கோடி மதிப்பிலான செக் கொடுத்திருந்தது அதேபோன்று ஒன்றரை கோடி மதிப்பிலான கார் ஒன்றையும் பரிசளித்திருந்தது. என்னதான் சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு ஓவராக சோப்பு போட்டாலும் கணக்கு விஷயத்தில் நான் ரொம்ப கறார் என நிரூபித்திருக்கிறார் தலைவர்.
ஜெயிலர் படத்தில் தன்னுடைய சம்பளத்தை 120 கோடியாக பெற்ற ரஜினிகாந்த் அதன் வெற்றியினால் தலைவர் 171 படத்தில் தன்னுடைய சம்பளத்தை 100 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இப்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் படத்திற்கு மொத்தம் 220 கோடி டீல் பேசியிருக்கிறார். ரஜினியின் சம்பளமே 200 கோடி என்றால் கண்டிப்பாக படத்தின் பட்ஜெட் 700 கோடியை தாண்டும் என்று பேசப்படுகிறது.
ஜெயிலர் படத்தில் கிட்டத்தட்ட 600 கோடியை தாண்டி லாபம் பார்த்ததால், ரொம்பவும் தைரியமாக அடுத்த நகர்வை ரஜினியின் படத்திற்காக செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். எப்படியும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் படம் சோடை போகாது என்ற நம்பிக்கையும், ரஜினிக்கு இருக்கும் மாஸ் ஓப்பனிங்கையும் நம்பி இப்படி ஒரு பெரிய தொகையை படத்தின் மீது போடுகிறது இந்த நிறுவனம்.
என்னதான் சூப்பர் ஸ்டாருக்கு ஓவராக சோப் போட்டு, கார் மற்றும் செக் என பரிசளித்தாலும் அவர் தொழிலில் கரெக்டாக இருக்கிறார் என்பது இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் ஒரு படத்தின் பட்ஜெட்டையே ஒரு ஹீரோவுக்கு சம்பளமாக கொடுப்பது என்பதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். தேவை இல்லாத சிக்கலில் இப்போது இந்த நிறுவனம் மாட்டி கொண்டது.