வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கிடைத்த வாய்ப்புகளை கோட்டை விட்ட 5 பிரபலங்கள்.. இவர்கள் செய்த தவறு என்ன?

Kollywood Failure Heroes : இந்த உலகத்தில் எப்படியாவது மேலே வர வேண்டும் என்பதுதான் பலரின் கனவாகும். அதற்கு வாய்ப்புகள் கூட கிடைக்காமல் போராடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் சினிமாவிலையே ஒரு காலத்தில் பயங்கர ஃபேமஸ் ஆக இருந்த சிலர், விஜய், அஜித் போன்றவர்களுக்கு காம்படிஷன் ஆக வருங்காலத்தில் வருவார்கள் என எதிர்பார்த்தவர்கள், கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டுவிட்டு தற்போது மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஹீரோக்கள் யார் என்று பார்க்கலாம்.

ஜெய்: தமிழ் சினிமாவில் சர்ச்சை ஹீரோவாக பேமஸ் ஆகி இருக்கும் ஜெய் கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டு, இப்போது தலையில் துண்டு போடும் நிலைமையில் உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, பிறகு சிவா மனசுல சக்தி, ராட்சசன் போன்ற படத்திற்கு முதலில் ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த அனைத்து பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தையும் தவற விட்டுவிட்டு இப்போது சர்ச்சை நடிகராக சோசியல் மீடியாக்களில் மட்டும்தான் மிகப் பிரபலமாக உள்ளார்.

Also Read:த்ரிஷா என்ட்ரியால் சினிமாவை விட்டு விலகும் லேடி சூப்பர் ஸ்டார்.. புதுசா தொழில் தொடங்கிய நயன்-விக்கி

சாந்தனு: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான பாக்யராஜின் இளைய மகன் சாந்தனு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்ட திரைப்படங்கள் பாய்ஸ், காதல், சுப்பிரமணியபுரம் ஆகும். பாய்ஸ், காதல் இரண்டு திரைப்படமும் அவரின் தந்தை மறுத்துவிட்டார். ஆனால் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் வாய்ப்பு இவரே தவற விட்டு விட்டார். தற்போது வரை அதை நினைத்து வருந்துகிறார் என்று அவரே கூறியுள்ளார்.

பிரசாந்த்: 2000 களின் தொடக்கத்தில் பாப்புலராக இருந்தவர் தான் பிரசாந்த். இவர் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது போல் தவறவிட்ட ஹிட் திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகும். அதுவும் இந்த திரைப்படத்தில் தபு உடனெல்லாம் என்னால் நடிக்க முடியாது . ஐஸ்வர்யா ராய் இருந்தால் தான் நடிப்பேன் என்று கண்டிஷன் எல்லாம் போட்டாராம். பிறகு பயங்கர ஹிட்டான மின்னலே திரைப்படத்தையும் தவறவிட்டிருக்கிறார்.

Also Read:ஜவான் வெற்றியால் தமிழுக்கு முழுக்கு போடும் அட்லீ.. காப்பினாலும் நரசுஸ் காப்பிதான் வேணுமாம்

அப்பாஸ்: ஒரு காலத்துல எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்பது போல தற்போது மாறியவர்தான் அப்பாஸ். அவரின் ஆரம்ப காலகட்டத்தில் பல பேரின் கனவு கண்ணனாகவே இருந்தவர். ஆனால் தற்போது டாய்லெட் விளம்பரங்களில் நடிக்கும் அளவிற்கு இவரின் நிலைமை மாறியது. திருப்புமுனையாக அமையயிருந்த ஜீன்ஸ், காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்களின் வாய்ப்பு எல்லாம் தவற விட்டு விட்டார்.

பரத்: பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காதல் திரைப்படத்தினால் பயங்கர பேமஸ் ஆன நடிகர் தான் பரத். இவரும் தனது கெரியரில் சில முக்கியமான திரைப்படங்களை கோட்டை விட்டு இருக்கிறார், அது திருவிளையாடல் ஆரம்பம், கோ போன்ற திரைப்படங்கள் ஆகும். கோ போன்ற அரசியல் சார்ந்த கருத்துக்கள் உடைய திரைப்படங்கள் நான் நடிக்க மாட்டேன் என்று இவரே, கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டு தற்போது எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவில் உள்ளார்.

Also Read:இந்த ஸ்டைலில் படம் பண்ணுங்க.. கமல் வார்த்தையால் எரிச்சலான எச்.வினோத்

Trending News